சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்
சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான புலிகளின் பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அரவிகன்,
அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன் பாலசிங்கம்,
உலக ஈழ இளைஞர் அமைப்பின் அண்டுவேல்மன்,
கனடாவைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி,
பிரித்தானியாவைச் சேர்ந்த இளங்கோ,
கனடாவைச் சேர்ந்த இளங்கபிள்ளை,
அர்ஜூன எதிர்வீரசிங்கம்,
வினிபரா எனப்படும் ரஞ்சித் பெர்னாண்டோ,
சுவீடனைச் சேர்ந்த ஜெகன் மோகன்,
நோர்வேயைச் சேர்ந்த ஜெயசந்திரன், தெதியவன்,
மலேசியாவைச் சேர்ந்த நாகலிங்கம்,
லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கருணாகரன்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சதியன் குமரன்,
கனடாவைச் சோந்த லுக்காஸ் பாலசிங்கம் (நடேசனின் சகோதரர்),
பரிசின் மணிவண்ணன்,
பிரான்ஸைச் சேர்ந்த நடராஜா மதிதரன்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலந்திரன்,
கனடாவின் டேவிட் பூபாலபிள்ளை,
அமெரிக்காவைச் சேர்ந்த ராஜ் ராஜரட்னம்
உள்ளிட்டோரின் பெயர்களை அவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரி அதிகாரி, முன்னாள் சட்ட மா அதிபர் ஆகியோரும் இந்த புலிகள் வலையமைப்பில் அங்கம் வகித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டல், புலிகளின் இணைய தளங்களை செயற்படுத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமரன் பத்மநாதனின் இந்த அம்பலப்படுத்தலுடன் சில புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக திவயின செய்தி தெரிவிக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment