புவனேஸ்வரி விவகாரம்: மீடியாவை 'அடக்க' திரையுலகம் முதல்வருக்கு கோரிக்கை
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்-அமைச்சர் கருணாநிதி க்கு அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள் வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
கருணாநிதி தலையிட வேண்டும்!
எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம், என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாம் நடிகர் சங்கம்.
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment