புதினம், தமிழ்நாதம் இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன?
புதினம்,தமிழ்நாதம்எனும் இரு இணையத்தளங்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள கரன் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இவ் இரு இணையத்தளங்களும் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரின் மேற்பார்வையில் இயங்கி வந்தன. இவ் இணையங்களுக்கான செய்திகள் வன்னியில் இருந்து நந்தவனம் எனும் பெயரில் இயங்கிவந்த புலிகளின் இளை ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
அதேநேரம் இவ் இணையத்தினை நிர்வகித்து வந்த கரன் என்பவருக்கு தயா மாஸ்ரரின் சிபார்சின் பேரில் மேற்குலக நாடொன்றில் வசிக்கும் தமிழ் தொழில் அதிபர் ஒருவர் நிதி உதவி செய்து வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரனுக்கான மாதாந்த வருமானம் கிடைக்காமையால் அவ்விணையம் தடைப்பட்டிருக்க வேண்டும் என கடந்த காலங்களில் புலிகள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.
அத்துடன் தயா மாஸ்ரர், இலங்கை அரசாங்கத்தினால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது பலரினாலும் உணரப்பட்டுள்ள விடயம். அந்நிலையில் தயா மாஸ்ரரின் நம்பக்கைக்கு உரியவரான கரனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இணையம் தனிப்பட்ட காரணங்களுக்காக சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்ள்ளது. தனிப்பட்ட காரணங்கள் எனும்போது தயா மாஸ்ரரின் தேவைக்காக நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட இணையம், பிற்காலத்தில் தயா மாஸ்ரர் கும்பல் மீண்டும் ஒரு வடிவத்தில் மக்களை ஏமாற்ற மக்கள் முன் தோன்றும்போது புதினம், தமிழ்நாதம் போண்ற இணையங்களும் தமது வடிவத்தையும் மாற்றிக்கொண்டு வெளிவருவதற்கு முன் ஏற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
புலிகள் இயக்கம் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளபோது, குறிப்பிட்ட இரு இணையங்களும் கே.பி தரப்பினரை ஆதரிவந்திருந்தன. கே.பி யின் கைதை தொடர்ந்து இடம்பெற்ற தொடர்கைதுகளையும், இலங்கை அரசியல் மாற்றங்களையும் வைத்து நோக்குகின்றபோது, கொழும்பில் தடுப்புக்காவலில் உள்ள கேபி யின் அழுத்தத்தில் குறிப்பிட்ட இணையங்கள் நிறுத்தப்படனவான என்கின்ற சந்தேங்களும் எழுந்துள்ளன.
-இலங்கைநெட்-
0 விமர்சனங்கள்:
Post a Comment