இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் கைது
குவைத்தில் வயோதிப தொழில்தருநரை ஏமாற்றி அவரது வீட்டை விற்கச்செய்து பணத்தை சுருட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 70 வயதைத் தாண்டிய முதியவரான தமது தொழில்தருநருக்கு ஆசைவார்த்தை காட்டி அவரது வீட்டை விற்கச் செய்த பிரஸ்தாப பணிப்பெண் வீட்டை விற்ற பணத்தை தாமே சுருட்டிக் கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், வயோதிபர் அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தமக்கு மேற்படி பணத்தை தந்ததாக பணிப்பெண் கூறுகிறார்.
வயோதிபரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த பிரஸ்தாப பெண் தற்போது ஒரு இலட்சத்து 20 ஆயிரம் குவைத் டினாருக்கு சொந்தமானவராக இருக்கிறார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையில் அவரது சொந்த இடத்தில் ஒரு பெரிய மாளிகை ஒன்றையும் இப்பெண் கட்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
108 வயது மூதாட்டியான இந்த வயோதிபரின் தாயாரும் வயோதிபரின் குடும்பத்தினரும் இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment