முதல்வர் கருணாநிதியுடன் நடிகர் விவேக் சந்திப்பு
தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள், நடிகைகள் படு ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நேற்று சென்னையில் குழுமிய பத்திரிக்கையாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிக இழிவாக, ஆபாசமாக பேசிய நடிகர்கள் விவேக், சத்யராஜ், விஜயக்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். லெனினை பெண்கள் வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைப் போல இவர்களையும் அதே சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையர் ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென முதல்வர் கருணாநிதியை நடிகர் விவேக் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு என்று தெரியவில்லை.
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment