சரத் பொன்சேகாவை - கோதாபய ராஜபக்ஷாவின் இணையத்தளம் வெட்டியெறிந்துள்ளது
இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவும் உடன் இருந்துள்ளார். எனினும், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப+ர்வ இணையத்தளமான Defence.lk
தளத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய செய்தியில் சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார்.
Defence.lk இணையத்தளம் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~வின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு நாணயத்தை வெளியிடும் சந்தர்ப்பத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இருக்கும் புகைப்படத்தையே அனைத்துப் பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. எனினும், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சரத் பொன்சேகா திட்டமிட்டே நீக்கப்பட்டதாக இணையத்தளத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவிற்கும், கோதாபய ராஜபக்க்ஷாவிற்கும் இடையிலான பனிப்போரின் பிரதிபலனாகவே சரத் பொன்சேகா இவ்வாறு வெட்டியெறியப்பட்டதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.






0 விமர்சனங்கள்:
Post a Comment