முக்காடு போட்டபடி காவல் நிலையத்தில் கையெழுத்திட புவனேஸ்வரி
துப்பட்டாவால் முக்காடு போட்டபடி அவர் காவல் நிலையத்திற்கு வந்தார்.
வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானவர் புவனேஸ்வரி. சமீபத்தி்ல் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.
சென்னையில் தங்கி சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட நடிகை புவனேஸ்வரி நேற்று காலை 10 மணிக்கு வந்தார். போலீஸ் நிலைய வாசலில் புகைப்படக்காரர்கள் இருப்பதை பார்த்த புவனேஸ்வரி காரில் இருந்து இறங்காமல், சென்றார்.
பின்னர் 30 நிமிடத்துக்குப் பிறகு கருப்பு துப்பட்டாவால் முகத்தை மூடியபடி போலீஸ் நிலையத்துக்குள் சென்றார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் வேகமாக வெளியில் வந்து காரில் ஏறிப் பறந்தார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கைதானபோது, முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா அணிந்தபடி வந்ததால் கடும் கண்டனத்துக்கு ஆளானார் புவனேஸ்வரி. இதனால் நேற்று பர்தா எதுவும் அணியாமல், கருப்புத் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி வந்தார் புவனேஸ்வரி.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment