கைதான இராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி கொடுத்தவர் பிரிகேடியர் உதயநாணயக்கார சொல்கிறார்
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் உலகின் கோடீஸ்வர வர்த்தகர் களின் ஒருவரான இராஜ் இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான பிரிகேடியர் உதயநாணயக்கார கோடீஸ் வர வர்த்தகரான இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் நாணயக்கார இணையத்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கிய போட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அப்பேட்டியில் தெரிவித்தவை வருமாறு:
இலங்கை அரசு இராஜரட்ணத்தை மிக நீண்ட காலமாகவே கண்காணித்து வருகிறது. இராஜரட்ணம் மிக நீண்டகாலமாகவே புலிகளுக்கு பெருந்தொகையான மில்லியன் டொலர்களை அன்பளிப்புச் செய்து வந்துள்ளார். ஆனால், இலங்கையில் அவரால் நடத்தப்படும் எந்தவொரு கம்பனியும் இது வரை இலங்கை அரசால் விசாரணைக்கு உட்படுத்தப்படவே இல்லை. இராஜரட்ணத்தின் விடயத்தில் அமெரிக்காவின் தற்போதைய விசாரணைகளின் முடிவுகள் வெளிவரும் வரை இலங்கை அரசு கண்டிப்பாக காத்திருக்க வேண்டி உள்ளது. அதன் பின்னர் இலங்கையில் இராஜரட்ணத்தால் நடத்தப்படும் கம்பனிகள் மூலம் புலிகளுக்கு நிதி அன்பளிப்புகள் மேற்கொள்ள ப்பட்டிருக்கின்றவா என்று நாம் விசாரணைகளை நடத்துவோம்.
இந்தக் கம்பனிகள் புலிகளுக்கு நிதி அன்பளிப்புக்கள் மேற்கொண்டிருக்கின்றன என்பதை எம்மால் நிரூபிக்க முடியுமாயின் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment