அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை : போலீஸ் கமிஷனர் பதில்
சென்னை : ""அவதூறாக பேசிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பத்திரிகையாளர் சங்கங்கள் கொடுத்த புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நிபுணர்களின் கருத்து கிடைத் தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாக நடிகர் சங்க புகாரைத் தொடர்ந்து, "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனின் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, "சிடி' ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, "புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள் ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Dinamalar
0 விமர்சனங்கள்:
Post a Comment