முள்ளுக் கம்பிகளுக்குள்.. ஊமைகளாய் முடங்கியவற்கு “பூபாளம் மறந்த முகாரி இவர்!!”
ஊமைகளாய் முடங்கியவற்கு
“முகாரி” பாடி “மொய்” கறக்க
முனைப்போடு கச்சேரியாம்!
விதம் விதமாய் தலையங்கம் கொடுத்து
“பிச்சை” எடுக்க நம்மவற்கு
என்ன சொல்லியா கொடுக்க வேண்டும்
பாசமுள்ள “‘தமிழ்” பற்றாளர்கள் இவர்கள்!
“சாவிலும் வாழ்வோம்” என்றவர்கள்
இப்படித்தான் “தலை”ப்பிடுவார்கள் போல
சொந்த மண்ணில் வாழ துடிப்பவர்
“முகாரி” இங்கு பாடுதல் முறையோ!
முள்ளுக்கம்பி வேலிக்குள்..
மூடப்பட்டவர் வெளிவர “பூபாளம்” பாடாமல்
முகாரி பாடும் “புங்கை” மகனே
“பங்கு” பிரச்சினையால் பணத் தட்டுப்பாடோ!..
“கோவில்”கள் கட்டி “உண்டியல்” வைத்து
“திருவிழா” நடத்தி “தேர்” இழுத்து
திருப்”பலி” நடாத்தி சேர்த்தெடுத்த
காசுகளும், களஞ்சிகளும் தான் எங்கே??…..
கரைஞ்சு போகாமல் கரன்சியை
“மனை”யாக்கி “மாளிகை”யாக்கி
மறைத்து வைத்தல்லவா உள்ளீர் “பினாமி” பெயரில்
“சுனாமி”க்கு சேர்த்ததும் உதுக்குள்ள தானே!..
பிறகு என்ன “மேடை” போடுகிறீர்கள்
“திருவிழா” வில் கடை போட்டு பழக்கமானவராச்சே..
தமிழுக்கு சேர்த்து வைத்ததில் சேதாரம்-
என்டத்திற்கு ‘ஆதாரம்” இல்லை தானே!..
பணம் பிழைக்க பாட்டுக் கச்சேரி
பழக்கப்பட்ட “வழி” முறைதானே..
“வன்னி” சனத்தை காட்டி “பிச்சை” எடுக்காதீர்
தயவுசெய்து “பிச்சை” எடுக்காதீர்!!..
“பாவம” அந்த மக்கள் காலம் காலமாய்
அரசைவிட “உங்களால்” தான் ஏமாற்றப்படுகிறார்கள்
“குடியும், குடித்தனமுமாய்” நீங்களிருக்க
“கூடாரமதில்” அவர்கள் வாழ்விருக்க..
“சேவை” செய்ய பிரியப்படுபவனே
முதலில் உன்”தேவை” என்னவென்று சொல்
தாய்நாடு தானே உன்னை அழைக்குது
பின்னர் ஏன் நீ மட்டும் “இங்கு” முகாரி பாடுகிறாய்!
உன் புதிய திட்டம் என்னவென்று சொல்
காணி வாங்க, வீடுகட்ட, கடைவாங்க
காரும் நகையும் வாங்க காணாமல் போனதாலே
“கானம்” இசைத்து “காசு” தேட நல்ல திட்டம் தான்!
நாகரீக “பிச்சை” நல்ல முறையில்
நாளுக்கு நாள் எப்படித்தான் யோசிக்கிறீர்கள்?
ஒரு முறை இந்த இரகசியத்தை சொல்லுங்கோவன்
மற்றவர்களும் முயற்சி செய்து பார்க்கட்டுமே!..
“ஊனமுற்ற” என் உறவின் வகையை சொல்
கண்ணிழந்த, கால் இழந்த முடமானவர்
எவ்வளவு என்ற “தொகையை” சொல்
இத்தனையும் “யாராலே” வந்தது என்று சொல்!
ஊராரின் “ஊனத்தை” காட்டி நீ
ஓலமிட்டு ஒப்பாரி வைத்து உன் “ஊன்”
உடம்பை “ஓசி”யிலே வளர்க்க நினைக்காதே
“ஏசி”யிலே படுத்திருந்து “காசி”யானந்தன்
காசுக்காய் எதாவது எழுதித் தந்திருப்பான்
அதை வாசித்து நீ வன்னி மக்களுக்காய்
“வருந்தி”யழுது வஞ்சகமாய் கண்ணீர் வடிக்காதே..
“விழிப்புணர்வு” பெயர் கொண்டு
“விளப்பமற்றவர்” படை நடைத்தி
உந்தன் “ஊர்” மக்களிடம் நீ சேர்த்த செல்வமெல்லாம்
“செலவு” செய்து முடித்துப் போட்டீரோ!
“வன்னி” மக்கள் பெயர் இட்டு
மடிப்பிச்சை கேட்காதே
மன்னிக்காது அவர்கள் பாவம்
மறுபடியும் மறுபடியும் எச்சரிக்ன்றோம்!..
உந்தன் “பாவம்” போக்கி நிற்க
பகுதி நேர “வேலை” தேடு
“முழு’மனிதன்” நீயாக நூறுவீதம் “வேலை நாடு”
நேசன். -சுவிஸ்
அதிரடி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment