போட்டோ பிடித்தால் நிர்வாணமாவேன் - போலீஸை மிரட்டிய புவனேஸ்வரி
15 வயதில் மகனைக் கொண்டுள்ள, 35 வயது புவனேஸ்வரி நேற்று முன்தினம் விபச்சார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் இரண்டு 'அழகிகளும்' கைது செய்யப்பட்டனர்.
அடையாறில் நான்கு படுக்கையறைகள் கொண்ட ஒரு சொகுசு வீட்டில் தாயார் மற்றும் மகனுடன் அவர் வசித்து வந்தார். போலீசார் புவனேஸ்வரியைக் கைது செய்த போது 'இதெல்லாம் சகஜம்' என்பதுபோல அவர்கள் சாதாரணமாகவே இருந்துள்ளனராம்.
ஆனால் புவனேஸ்வரிதான் ரொம்ப டென்ஷனாகி விட்டாராம். சண்டைக்கோழி போல் நடந்து கொண்டாராம். விசாரணையின் போது போலீசாரையும், தன்னிடம் வாடிக்கையாளர்களாக வந்து போன முக்கியப் புள்ளிகளையும் திட்டித் தீர்த்தாராம்.
அதேபோல, இன்றைக்கு தமிழ் தெலுங்கில் டாப் நடிகைகளாக இருக்கும் சிலரது பெயரைக் குறிப்பிட்ட கடுமையான வார்த்தைகளில் திட்டி, 'இவளுங்க லட்சணம் தெரியாதா உங்களுக்கு... தெரிஞ்சும் அவளுங்களுக்கே எஸ்கார்ட் மாதிரி போறீங்க... என்னை மட்டும் பிடிக்க வந்துட்டீங்க' என்று கூற, பதில் சொல்ல முடியாமல் விழித்துள்ளனர் போலீசார்.
அவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது ஏராளமான பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க சூழ்ந்து விட்டனர். இவர்களில் பலரும் புவனேஸ்வரிக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். அவர்களிடம் தனிப்பட்ட முறையில், 'படமெடுக்கா வேணாம்மா... போங்க' என்று கெஞ்சிப் பார்த்தார் புவனேஸ்வரி.
ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை. எனவே கடுப்பான புவனேஸ்வரி போலீசாரிடம், 'என்னை படம் பிடிக்க அனுமதித்தால் நிர்வாணமாக நிற்பேன்' என்று மிரட்டினாராம்.
இதையடுத்து போலீசார் அவரை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கொள்ள அனுமதித்தனர். அதன் பிறகு முகம் மூடப்பட்ட புவனேஸ்வரியை புகைப்படக்காரர்கள் வளைத்து வளைத்துப் படம் எடுத்தனர்.
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment