'லிஸ்ட்': ஆக்ஷன் கோரும் நடிகர்-நடிகைகள்!
புவனேஸ்வரி கைதைத் தொடர்ந்து மேலும் பல முன்னணி, பெரிய நடிகைகளும் விபச்சார வழக்கில் கைது செய்யபடலாம் என்ற செய்தி மற்றும் அந்த நடிகையர் குறித்த படங்களை வெளியிட்டிருந்தது ஒரு நாளிதழ்.
இது குறித்து சென்னை நடிகர் சங்க கட்டிடத்தில் கூடி ஆலோசனை நடத்திய நடிகர்கள் செய்தி வெளியிட்ட அந்த நாளிதழ் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர்.
பின்னர் நடிகர் சங்க மேலாளர் நடேசன் முதல்வர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் இன்று நடிகர் சங்கத்தில் கூடிய நடிகர்களும், நடிகைகளும் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "நடிகைகள் மீது அவதூறு பரப்பும் வகையில் செய்திகள் வெளிவந்துள்ளது. இது தங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.
மேலும் கவுரமான முறையில் வாழ்ந்துவரும் எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு செய்திகளை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. எனவே அந்த நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்று தெரிவித்துள்ளனர்.
மான நஷ்ட வழக்கு - சரத்
இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த நாளிதழ் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய அவசர கூட்டத்தின் முடிவில் பேசிய சரத், "நடிகை ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தியை வெளியிட்ட மாலை நாளிதழ் மற்றும் காலை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது அதில் காவல்துறைக்கு நடிகை கொடுத்த பட்டியல் என்று கூறி, நடிகைகள் பெயர்கள், படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
நாங்கள் இன்று காவல்துறை ஆணையரிடம் இதுகுறித்துக் கேட்டபோது நடிகை புவனேஸ்வரி இதுபோல எந்த வாக்குமூலம் அளிக்கவில்லை, எங்களிடம் அதுதொடர்பான ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார்.
எனவே ஊகமாகவே செய்திகள் வெளியாவதாக நாங்கள் கருதுகிறோம். அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியினால் நடிகைகள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவதூறாக வேண்டுமென்றே செய்தியை வெளியிட்டுள்ள நாளிதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
வருகிற 7 தேதி நடிகர் சங்க கட்டிடத்தில் இது தொடர்பாக கூட்டம் நடைபெறும்... அவதூறு செய்தி வெளியிட்ட நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும்... என்றார் அவர்.
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment