இப்ப இவர்களால் போக முடிந்ததென்றால் என்றால் அப்ப அவர்களால் ஏன் போகமுடியாமல் போனது
ஜாவாவுக்கும் சுமாத்திராவுக்கும் இடையிலுள்ள சுண்டா நீரிணையில் மரப்படகொன்றில் சென்றுகொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பொதுமக்கள், அதிலும் பெண்களும் சிறுவர்களுமாக மிகவும் தைரியமாக ராணுவ மற்றும் கடற்படையின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார்கள். பாராட்டக்கூடிய விடயம்தான்.
காற்றுக்கூட போகமுடியாத இடத்திற்குள் நாம் போய் வந்துவிடுவோம் என்று மார்தட்டித்திரிந்த புலிகளால் ஏன் கடைசி நேரத்தில் வெளியேற முடியாமல் போனது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
அதற்கு "வெளியேறினார்கள் ஆனால் வெளியேறவில்லை" என்று யாரோ சொல்வதும் என் காதுகளில் வந்து விழுகிறது.
- ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment