விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமானப் பயண வாய்ப்பு
வட தீவான பெனாங்கிலிருந்து போர்னியோ தீவிலுள்ள குசிங்கிற்கு கடந்த புதன்கிழமை பயணித்த "எயார் ஏசியா' விமானத்தில் பயணம் செய்த லியூ சியோவ் ஹஸியா (31 வயது) என்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
லியூ சியோவ் ஹஸியாவுக்கு பிரசவவலி கண்டதும் விமானமானது அவசரகால நிலைமையின் கீழ் மலேசிய தலைநகருக்கு திசை திருப்பப்பட்டது.
எனினும், கோலாலம்பூரில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 2000 அடி உயரத்தில் பறந்தபோது குழந்தை விமான ஊழியர்களின் உதவியுடன் பிரசவமாகியுள்ளது.
இந்நிலையில் "எயார் ஏசியா' விமான சேவையானது மேற்படி தாய்க்கும் பிள்ளைக்கும் வாழ்நாள் முழுவதும் தமது சேவையில் இலவச பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அந்த விமான சேவையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் மோஸஸ் தேவநாயகம் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment