ஜக்ஸனின் உடலில் வழக்கத்திற்கு மாறான அடையாளங்களும் தழும்புகளும்
பிரேத பரிசோதனை அறிக்கை
பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் உதடுகள், தலை மற்றும் கண்களைச் சுற்றிய பகுதி என்பனவற்றில் வழமைக்கு மாறான அடையாளங்கள் காணப்பட்டதாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக "த சன்' ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜக்ஸனின் வாயைச் சுற்றி இளஞ் சிவப்பு நிற அடையாளங்களும் தலை உச்சியில் கறுப்பு நிற தழும்புகளும் கண்களுக்கு கீழ் கரு நிற அடையாளங்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடகரின் உடல் நலம் சிறந்த முறையிலும் இருதயம் பலமாகவும் காணப்பட்ட நிலையில், அளவுக்கதிகமான மருந்து பாவனை காரணமாகவே அவர் இறந்துள்ளதாக அந்த பிரேத பரிசோதனை அறிக்கை யில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது இடது மற்றும் வலது காதுகளுக்கு பின்னால் 2 சென்ரிமீற்றர் அடையாளங்கள் காணப்பட்டன.
அவரது மூக்குத் துவாரத்தின் ஒரு பக்கத்தில் தழும்பு காணப்பட்டதுடன் அவரது வலது தோளில் 10 சென்ரி மீற்றர் நீளமான காய அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
7.5 சென்ரிமீற்றர் நீளமான வேறு இரு அடையாளங்கள் அவரது கழுத்தில் காணப்பட்டதுடன் சிறிய இரு அடையாளங்கள் அவரது கைகளி லும் மணிக்கட்டிலும் காணப்பட்டுள்ளன.
அத்துடன் ஜக்ஸனின் முகம், மார்புகள் மற்றும் கைகள் ஆகிய பகுதிகளில் இயற்கை யான தோலின் நிறம் மாற்றத்திற்கு உட் பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment