2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினை பிரபாகரன் தட்டிவிட்டார் - முதல்வர் கருணாநிதி
ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது குறித்து மேலும் அறிகையில், வி.புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
யார் மீது குற்றம் கூறுவதற்காக தான் இதனைக் கூறவில்லையெனத் தெரிவிக்கும் அவர், ராஜீவ் காந்தியின் கொலை ஈழ விடுதலைப்போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது எனவும், 2005 ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வந்த போதும், அதை பிரபாகரன் எட்டி உதைத்து தவறான காரியம் செய்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகள் அவசரமாக எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பதை எண்ணிப்பார்த்து மௌனமாக அழுவதாகவும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக தந்தை செல்வா காலத்திலிருந்து திமுக நடத்திய போராட்டங்களையயும் இந்த அறிக்கையில் அவர் பட்டியலிட்டுள்ளதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்க்காணல் ஒன்றை சுட்டிக்காட்டிய, முதலமைச்சர் அச் செவ்வியின் சார்பாகவே இந்த அறிக்கையில் கருத்துக்கள் வெளியிடப்படுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment