தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பிளவு : ரெலோ ஜனாதிபதிக்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் முரண்பாடுகள் உருவாகி பிளவுபடும் நிலைமை தோன்றியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முழுமையாக ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவ்வமைப்பின் சார்பாக பேசவல்ல ஒருவர் அததெரண எனும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்குதாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment