வருகினம் வருகினம் தலைவருக்கு அந்தியேட்டி செய்ய வருகினம்!
புலம்பெயர் நாடுகளுக்கு மாவீரர்தினத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து கொஞ்சப்பேர் வருகினமாம் தாயகத்திலை அங்க எல்லாம் முடிஞ்சுபோச்சுது இவையள் ஏன் வருகினம்? இவையள்தானே வருசா வருசம் ஒசியாக பிளேன் ஏறி வந்து புலம்பெயர் தமிழர்களை உசுப்பேத்தி தம்பியின்ட தலைமையில தமிழ்ஈழம் கிடைக்கப்போகுது எண்டு உணர்ச்சி பொங்கப்பேசி ஈழத்தமிழர்களை தட்டி எழுப்ப அதை நம்பி புலி இரசிகர்கள் தேசியத்தலைவர் தமிழ்ஈழம் பெற்றுத்தரப்போகிறார் எண்டு பணத்தை பவுண்ஸ்சாகவும், டொலராகவும்,மார்க்காகவும் அனுப்பித்தள்ளி ஆயிரக்கணக்கான தமிழர்களை பலிகொண்டு அங்குள்ளவர்களை அவலைகள் ஆக்கி அகதிமுகாமிற்குள் அடைத்துவச்சதுதான் கடைசியாகக்கண்ட மிச்சம்.
இனி என்னத்திற்கு வருகினம் எண்டு மண்டையைப்போட்டுக் குடைய நண்பர் சொன்னார் இதுக்கெல்லாம் போய் ஏன் மண்டையைப்போட்டுக்குடையிறாய். இரகசியமாக தலைவருக்கு ஆறுமாத அந்தியேட்டி செய்ய அல்லோ வருகினம், எண்ணன்டு ஆறுமாதத்தாலை அந்தியேட்டி எண்டுகேக்க மக்கு மக்கு எண்டு உனக்கு ஓண்டும் விளங்காது ரியூப்லைட் எண்டு என்னைப்பேசிப்போட்டு கணக்குப்பாரு தமிழ்சனத்திற்கு அமைதி கிடைச்சு ஆறுமாசம் ஆச்சுது தலைசவரின்ட அவலச்சாவு நடந்தும் ஆறுமாசம் ஆச்சுது மேமாதம் அல்லோ நடந்தது வடிவாக கணக்கைப்பார் எண்டார்.
நண்பர் சொன்னது ரொம்பக்கரக்ட்டாச்சு. இந்துக்களின் முறைப்படி அவலச்சாவுகளுக்கு ஆறு மாதத்திலைதான் அந்தியேட்டி செய்யிறது கண்டியோ எண்டு நண்பர் சொன்னார்.
ஆனால் இந்தப் பயல்களுக்குத் தெரியும் தலைவரின்ட கதை முடிஞ்சுது எண்டு. ஆனால் பாருங்கோ இதை வெளியிலை சொன்னா இவையின்ட வயித்துப்பிழைப்பு போச்சுது அதுதான் பிசினஸ் கெட்டுப்போகாம இருக்க வெளிநாட்டிலை உள்ள புலிப்பிரமுகர்கள் பிளான் பண்ணி நெடுமாறன்களும், வை.கோபால்சாமிகளும், சீமான்களும், திருமாவளன்களும் அவசரமாக அழைக்கப்பட்டிருக்கினம் ஈழத்தமிழர்களை இழிச்சவாயன் ஆக்கப்போயினம் என்ன சொல்லப்போயினம் எண்டால் அதுதான் தலைவர் உயிரோட இருக்கிறார் ஆயிரம் போராளிகளோட இருக்கிறார்.
தமிழ்ஈழம் பிடிச்சுத்தருவார் எண்டு நல்லாய்பேய்க்காட்டப்போகினம் அப்பனே முருகா! யாரட்டை சொல்லுறது பிரபாகரனின்ட மரணத்தைக்கேட்டு கருணாநிதியே கண்ணீர் விட்டுவிட்டார் எண்டு சொல்லியும் கேட்காம கதை சொல்லப்போயினம்.
நெடுமாறனுக்கும், வை.கோபால்சாமிக்கும், டைரக்டர் சீமானுக்கும், திருமாவளவனுக்கும் ஏனையவர்களுக்கும் ஓரு வேண்டுகோள்! “நீங்கள் நாடு கடந்த தமிழ்ஈழம் எண்டு பிசினசுக்காக கொக்கரிக்காமல் இது காடுகடந்த தமிழ்ஈழம் என்பதே உண்மை”. காடு எண்டால் சுடுகாட்டைத்தான் சொல்லுறம் இவ்வளவு காலமும் கொக்ககரிச்சி ஈழத்தமிழர்களையும் பிரபாகரனையும் சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்.
உங்களால் வன்னிச்சண்டையை நிறுத்தமுடிந்ததா? அல்லது தமிழ்மக்களை காப்பாற்ற முடிந்ததா? தமிழ்நாட்டில் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் உங்கள் வயித்துப்பிழைப்புக்காக ஈழத்தமிழர்களை இனிமேலாவது பலிக்கடா ஆக்காதீர்கள்.
முகாமில் உள்ள மக்களினதும் சரணடைந்த பத்து ஆயிரம் போராளிகளினதும் விடுதலையை எதிர்பார்த்து உறவுகள் காத்திருக்கின்றன. அதற்கும் மண் அள்ளிப்போடாமல் இருந்தாலே பெரிய நன்றியாக இருக்கும்.
-செல்லையன் (கனடா)
நெருப்பு
0 விமர்சனங்கள்:
Post a Comment