புலிகளிடமிருந்து நிதிஉதவி பெற்றுக்கொள்ள தயார் சரத்பொன்சேகா
நாட்டின் பொருளாதாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதை அச்சமயம் அவர் ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி தசாப்தங்களுக்கு முன் கடைப்பிடித்து வந்த திறந்து பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், தான் ஜனாதிபதியாக தெரிவானால் அதனையே கடைப்பிடிக்கப் போவதாகவும் கூறினார்.
கூட்டணியின் பங்காளி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கையை முழுமையாக எதிர்த்து வருவது பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.பொன்சேகாவின் இவ்வாறான கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ளுமா என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவ்வாறான கொள்கை உள்ளூர் கைத்தொழில்களை பாதிப்பதுடன் அரச துறையில் வேலை வாய்ப்புகளையும் குறைத்து தனியார்மயப்படுத்தலை ஊக்குவிப்பதுடன் எரிபொருள் விலைகளையும் அதிகரித்துவிடும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் விரும்பினால் மனத்திருப்திக்காக மதுபானம் அருந்தும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜெனரல் பொன்சேகா மற்றொரு தவறான விடயத்தையும் அங்கு குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டில் குடிகாரர்கள் பெருமளவில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.
அத்துடன் தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்களிடமிருந்தும், புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் அங்கு கூறியிருந்தது மிகவும் மோசமான ஒரு கூற்றாக அமைந்தது.
நாட்டின் ஸ்திரத்தை ஒழிக்கும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் சதி வேலையின் ஒரு பகுதியாக ஜெனரலின் இந்த கூற்று அமைந்திருப்பதாக பொது மக்கள் கோபாவேசத்துடன் இருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென ஜெனரல் அங்கு அழுத்தமாக கூறினார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற தூரத்துக்கனவை செய்ய முடியாத ஒன்றைப் பற்றி பேசுவதற்கு முன் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை யுத்தமுனையில் தான் பதவி வகித்தபோது பல தவறுகளை செய்ததாக ஜெனரல் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் ஒப்புக் கொண்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். இதனால் தடுமாற்றம் அடைந்த ஜெனரல் பொன்சேகா அக்கேள்விகளில் பலவற்றுக்கு பதிலளிக்கும் அரசியல் அனுபவம் தனக்கு இல்லை என்று கூறியதுடன் முடிந்தவரை குறைந்த அளவு கேள்விகளையே தன்னிடம் கேட்குமாறு ஊடகவியலாளர்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட மேற்குலகிலிருந்து பெருந்தொகை பணம் பொன்சேகா அமெரிக்காவின் கைப்பொம்மை; தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு
சரத் பொன்சேகா அமெரிக்காவின் ஒரு கைப்பொம்மையாக இயங்குவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்துவதற்கு லண்டன், பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளிலிருந்து பெருமளவில் பணமும் உதவிகளும் ரணில் விக்கிரமசிங்க ஊடாக அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் உறுப்பினர் கலாநிதி பியசேன திஸாநாயக்கா தெரிவித்தார்.
நேற்று கொழும்பு தேசிய நூலகத்தின் ஆவண சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கலாநிதி திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.இம்மாநாடு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தலைமையில் நடைபெற்றது.தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த திஸாநாயக்கா அண்மையில் சரத்பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தார் எனத் தெரிவித்தார்.
அவர் அந்த நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றுள்ளார்.அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றும் பிளேக்குடன் நீண்ட நேரம் சரத்பொன்சேகா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவை வீழ்த்துவதற்கும் அதன் பிறகு இந்நாட்டின் ஆட்சியை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்க பிரஜையாக அங்கு வரும்படியும். அதற்காக சகல வசதிகளையும் செய்து தருவதாகவும் சரத்பொன்சேகாவிடம் பிளேக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இராணுவ சீருடை அணிந்து யுத்தம் செய்த காலத்தில் இலங்கையின் யுத்த ரகசியங்களை வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கின்றார். இச் செய்தி லண்டன் டைம்ஸ், ஸ்கை நியுஸ் ஆகிய ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அவர் இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றவர். இராணுவப் பதவியிலிருந்து வெளியேறியபின் யுத்த இரகசியங்களை வெளியிடுவது அவர் இந் நாட்டுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும்.தேசப்பற்றுள்ள இயக்கத்தின் உறுப்பினர் கலாநிதி வசந்த பண்டாரவும் இங்கு உரையாற்றினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment