திஸ்ஸநாயகத்தை விடுவிக்ககோரி ஜனாதிபதிக்கு ஒபாமா கடிதம்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சண்டேலீடர் பத்தி எழுத்தாளர் திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறுகோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் இதுகுறித்து அலரிமாளிகையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறுகோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார் திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்துவைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படுகின்றன குற்றவாளி நீதிமன்றில் தீர்ப்பளித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன். முன்னொருபோது என்மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது ஆனால் நான் உரியமுறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைபெற்றேன் எனக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் பொய்சாட்சி சொன்னமைக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது இதேபோல் திஸ்ஸநாயகமும் தனது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யமுடியும் அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம் இதனைவிடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொலையென சுனிலுக்கு பிணைகொடுத்தது போல் நான் பிணை வழங்கமுடியாது இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்துவிடும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment