நள்ளிரவில் கேட்ட சலங்கை ஒலி
வீடு, காணிகள் சம்பந்தமான பேராசையினால் சகோதர, சகோதரிகள் மத்தியில் சண்டை, சச்சரவு, குடும்ப விரிசலும் ஏற்படுவதுண்டு. தன்னுடைய காணியை சகோதரி அல்லது சகோதரியின் உரிமையான இடத்தை சகோதரன் பெற சம்பந்தப்பட்டவரை இல்லாமலாக்க சூனியம் செய்வதுமுண்டு. தாம் செய்யும் பாவச் செயல் ஒருநாள் தன்னை வந்தடையுமென்பதை அவர்கள் உணர்வதில்லை. நித்திய வாழ்வை தாம் பெற்றுவிட்டதாக அவர்களது நினைப்பு.
பாடசாலை காலத்திலிருந்து ஷிரானியும், சமனும் காதலர்கள். இரு குடும்பத்தாரின் விருப்பத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன் சமனின் சகோதரி ‘சிதாரா’வின் திருமணம் முடிந்ததும் ஷிரானி சமன் தம்பதியர்களானர்.
ஷிரானி, சமன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் துபாய் நாட்டில் தொழில் புரிவதால் இவர்களிருவரும் திருமணத்தின் பின் அந்நாட்டிற்கு செல்ல நடவடிக்கையெடுத்தனர். திருமணத்தின் பின் ஷிரானிக்கு சமன்மீது விருப்பமில்லா நிலையுருவானது.
இருப்பினும் இதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் ஷிரானி சமய வழிபாடுகளிலீடுபட்டார். இதையடுத்து இவர்களிருவரும் வெளிநாடு சென்றனர். சமன் தொழிலொன்றிலமர்ந்தார்.
சமனின் தந்தை துபாய் நாட்டில் பிரசித்தமான வேலைவாய்ப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றினார். தம்பதியர் அங்கு உறவினர் வீடொன்றில் தங்கினர். இரவில் ஷிரானியின் கழுத்தை எவரோ நெரித்து உடலை சிறுகச் செய்வதால் அவர் அசெளகரியத்துக்குள்ளானார். அச்சமயம் சமன் நித்திரையிலாழ்ந்திருப்பார்.
ஷிரானிக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டு சிகிச்சைபெற்றும் சுகமாகவில்லை. இவர் தங்கியிருக்கும் வீட்டிலுள்ள பெரியம்மாவுக்கும் இந்நிலை. பல வருடங்களுக்கும் முன் இலங்கையில் ஏற்பட்டதாகவும் அதனால் துபாய்க்கு வந்ததாகவும் கூறினார். இதையடுத்து ஷிரானி இலங்கைக்கு வந்தார்.
இங்குவந்த அவர் தம் பெற்றோரின் வீட்டில் தங்கி கொழும்பில் உள்ள பிரசித்த தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றார்.
ஒரு முறைக்கு ஐந்து, ஆறாயிரம் ரூபா செலவாகியும் பலனில்லை. வீட்டை சுற்றி சலங்கை ஒலி, எவரோ நடக்கும் சப்தம், துர்நாற்றம், புகைத்தல் வாடை, வெற்றிலை சாப்பிடும் வாடைகளை இவர் மட்டுமல்ல அவரது தாயுமுணர்ந்தார். இதனை சுகப்படுத்த பல ஆயிரம் ரூபாவினை செலவழித்து தாயத்து, மாந்திரிக வேலைகளை செய்தும் எவ்வித பலனுமேற்படவில்லை.
ஒருநாள் நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் ஷிரானி தன்னையறியாமல் நித்திரை செய்தார். அவருடைய உடலை எவரோ நெரித்து வேதனையேற்படுத்தியதால் உடல் வியர்த்தது. பிறகு எவரோ விசிறி காற்றை ஏற்படுத்தினர்.
யாரென்பதை பார்க்க கண்களை திறக்க முயன்றபோது கண்கள் பசையினால் ஒட்டப்பட்டது போலிருந்ததாம். இதனை இவர் தன் கணவரின் இல்லத்தவரிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை.
ஷிரானியை பார்க்க வந்தவரின் பையிலுள்ள பணப் பர்சை ஆவி வெளியிலெடுத்த சம்பவமொன்றும் நடைபெற்றது. வானொலி மூலம் பிரித் உச்சாடனத்தை ஒலிபரப்பியபோது ஆவியின் நிலை மோசடைந்தது.
தாயகம் திரும்பியும் சுகம் கிடைக்காததால், மீண்டும் மனைவி ஷிரானியை ஒன்றரை இலட்சம் ரூபா செலவழித்து அங்கழைத்துக்கொண்டு இந்திய நாட்டு மாந்திரிகரிடம் மனைவியை காண்பித்தார்.
அவருடைய மாந்திரிக வேலைகளிலும் குணம் பெறாததால் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று தன் துயரத்தை கூறி வழிபாட்டனர்.
குருவுக்கு இவளருகில் செல்ல முடியவில்லை. ஏதோவொரு சக்தி அவரை பின்னால் தள்ளியதாம். அவரது நெற்றியில் பொட்டிடவும் குருவினால் முடியவில்லை. அவர் பின்னால் தள்ளப்பட்டார். ‘உன் சொத்துக்களில் பேராசை கொண்டவர்கள் உன்னை இந்நிலைக்குள்ளாக்கியுள்ளனர்.
நீ உன் நாட்டிற்கு செல்ல வேண்டாம் உன்னை நையாண்டி செய்ய அவர்கள் தயாராயுள்ளனர் உன் குடும்ப வாழ்வை அழிக்க இவ்வாறு செய்துள்ளரென அங்கு தெரிவிக்கப்பட்டது.
வீடு திரும்பியதும் ஷிரானி கணவன் சமனை தாக்கினார். அன்றிரவு ஆவியின் சேட்டை அதிகரித்திருந்தன. கணவனுக்கு ஆவி தூக்கத்தை ஏற்படுத்தியது. அன்றிரவு ஆவி ஷிரானியின் கழுத்தை நெரித்து காலையில் எழுந்து பார்த்த போது கழுத்துப் பகுதி வீங்கியும் நகக் கீறல்களும் காணப்பட்டன. துபாயில் வசிக்கும் இவரது குடும்ப உறவினர் எட்டு பேரையும் அடிக்கடி ஆவி தொந்தரவு செய்தது.
‘உன்னை சுகப்படுத்த செய்ய வேண்டிய எல்லா கருமங்களையும் செய்தேன். இலட்சக் கணக்கான ரூபா செலவானது. நீ மீண்டும் தாயகம் சென்று பெளத்த தர்மத்தினடிப்படையில் கிரியைகள் செய்து சுகம்பெற முனையுமாறு கணவன் சமன், மனைவி ஷிரானியிடம் ஆலோசனை வழங்கி இங்கு அனுப்பி வைத்தார்.
ஷிரானி அந்நாட்டிலிருந்து வெளியேறியதும், அந்நாட்டிலிருந்த இவரது உறவினர் எட்டு பேரையும் பிடித்திருந்த ஆவியின் தொல்லை நீங்கியது.
ஷிரானி மீண்டும் தாயகம் வந்ததும் அவரது வீட்டில் சலங்கை ஒலி, நடக்கும் சப்தமாகியன கேட்டன. புகைக்கும் மனம், வெற்றிலை சாப்பிடும் மனம் உணரப்பட்டன. கழுத்து, உடல் நெரிப்பு மீண்டும் துவங்கியது.
ஆவி பற்றிய சம்பவங்கள், அதனை சுகப்படுத்தும் முறைகள் பற்றி எமது சகோதரப் பத்திரிகை சிலுமின, தினகரன் வாரமஞ்சரி பற்றியறிந்த ஷிரானியின் தாய் இவைபற்றி ஷிரானி குடும்ப அங்கத்தவர்களுடன் அதுருகிரிய விபஸ்ஸனா தியான மத்திய நிலையத்துக்கு வந்து வண. கஸ்நாவேஞானானந்த மத குருவை சந்தித்து தம் விபரங்களை தெரிவித்தனர்.
மதகுருவானவர் இலேசான தியான முறையினை மேற்கொள்ளுமாறு கூறி பிரித் உச்சாடனம் செய்து போதனையையடுத்து ஆசீர்வாதம் செய்தார். ஷிரானியால் அதனை சகிக்கமுடியவில்லை. ‘ஐயோ மதகுருவே பிரித் கூறவேண்டாம் என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை.
என் உடல் பற்றி எரிகிறது’ என்ற ஆவி. ‘அவ்வாறெனில் இந்தப் பிள்ளையை ஏன் நீ இடைஞ்சல் செய்கிறாய்’ எனக் கேட்டார் மதகுரு.
‘மதகுருவே இவரின் கணவரின் தங்கையும் மைத்துனருமே இதனை செய்தவர்கள். எங்கோயிருந்த நான் இதில் சிக்கிக்கொண்டேன். காணி சம்பந்தமான பேராசையினால் இரு குடும்பமும் அழிய சூனியம் செய்தனர். ஆலயங்களுக்கு சென்று என்னை தொந்தரவு செய்ததால் நான் கொடூரமானேன் என்றது ஆவி.
மானிட உலகில் நீ வாழும்போது செய்த பாவச் செயலுக்காக இப்போது நீ பேராசை பிடித்த பேயாகி துயரமடைகிறாய் போதா குறையாக பிறருக்கு இடைஞ்சலேற்படுத்தி தொடர்ந்து கஷ்டப்படப் போகிறாயா நான் உனக்கு நன்மை தேடி தருகிறேன் அந்த நன்மையை பெற்று பேராசை பிடித்த ஆவியிலிருந்து விடுபட்டு நல்லயிடத்தை சென்றடை.
அங்கு சென்று தானதர்மங்களில் கலந்து புத்த பூஜையில் ஈடுபட்டு சமயத்திலும், புண்ணியத்திலும் கலந்து உன் துயர நிலையிலிருந்து விடுபட முயற்சி செய்யென வண. ஞானானந்த மதகுரு ஆவிக்கு ஆலேசானை வழங்கினார்.
‘அருமை மதகுருவே உங்களுக்கு நன்மையுண்டாவதாக. இத்துயர வாழ்விலிருந்து என்னை விடுபடச் செய்து நல்ல நிலையையடைய எனக்கு நீங்கள் உதவி செய்வதாயின் நான் இவரது உடலிலிருந்து விடுபட்டுச் செல்லத் தயார் என்றது ஆவி.
ஷிரானிக்கு இருபத்தொரு போதி பூஜைகள் நடத்தி தானங்கள் வழங்கி, ஆவியாகியுள்ள இந்த இறந்த உறவினருக்கு நன்மையான கைங்கரியங்களை செய்து மாமிசம், மீன், கருவாடு, முட்டை, ஆகியவற்றை உண்ணாது.
கருணையுள்ளத்துடன் கைங்கரியங்களை தொடர்ந்து செய்யுமாறு மதகுரு ஆலோசனை வழங்கினார்.
வண. கஸ்நாவே ஞானானந்த மதகுருவின் ஆலோசனைப்படி கைங்கரியங்களை செய்து ஒரு மாதமாகியதும் ஷிரானியின் உடலில் புகுந்த ஆவி வெளியேறி சென்றுவிட்டதாம். மீதமுள்ள மற்ற வழிபாடுகளை செய்து முடிந்ததும் மீண்டும் தொழிலுக்கு மத்திய கிழக்கு செல்ல தீர்மானித்துள்ளார் ஷிரானி.
சொத்து, காணி, வீடுகளை பேராசை காரணமாக தனக்கு சொந்தமாக்கிக் கொள்வது துஷ்ட செயலாகும். பெரும் பாவமுமாகும். தான் உழைத்து சேகரிப்பதை தவிர்ந்து தவறான வழியில் இவைகளை பெற்று முன்னேற நினைப்பதற்கு இச்சம்பவம் நல்லதொரு பாடமாகும்.
எம். எப். ஜெய்னுலாப்தீன்
0 விமர்சனங்கள்:
Post a Comment