இலங்கையில் உள்ள தமிழ் கைதிகள் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை
மகசீன் சிறைச்சாலையில் "ஜே' புளக்கில் உள்ள 87 தமிழ் அரசியல் கைதிகள் தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரியும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 கைதிகள் காயம் அடைந்தனர்.
இவர்களில் 7 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்படி தாக்குதலையடுத்து மகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மேற்படி கைதிகள் தமக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளதுடன் மகசீன் சிறைச்சாலை உட்பட வேறு பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அவர்கள் சார்ந்த பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டுமென்ற கோக்கையையும் முன் வைத்துள்ளனர்.
மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் சிறையில் தமிழ்க் கைதிகளுக்கு நடக்கும் அநியாயம், அக்கிரமம், அட்டூழியம் தொடர்பாகவும் விரிவான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:
இலங்கையில் வாழும் தமிழர்களின் வரலாற்றில் சிறைகளில் படுகொலை செய்யப்படுவதும் அப்படுகொலை சம்பவங்கள் எதுவித விசாரணைகளுமின்றி மூடி மறைக்கப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலையில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு பழி வாங்கப்பட்டவர்கள் வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளே.
அதே மாதம் 25, 27 ஆம் திகதிகளில் சிறை அதிகாகளின் பூரண அனுசரணையுடன் சிங்களக் காடையர்களால் அடித்தும், வெட்டியும் கொடூரமாக 53 கைதிகள் கொல்லப்பட்டனர்.
பின்னர் 1977 டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி இதேவகையில் களுத்துறைச் சிறையில் மூன்று கைதிகள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். பின் இதே களுத்துறைச் சிறையில் 2000 ஆம் ஆண்டில் ஜனவரி 6, 7 ஆம் திகதிகளில் கைதிகள் சிங்கள காவலார்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு அக்டோபர் 28 ஆம் திகதி பண்டாரவளை பிந்துனுவேவ புனர்வாழ்வு முகாமில் 28 தமிழ் இளைஞர்கள் பாதுகாப்புக்காக இருந்த இராணுவ அதிகாகளின் துணையுடன் சிங்கள மக்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான சம்பவங்கள் பல தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தாலும் அவை அனைத்துமே வெளிவந்திருப்பதில்லை. அவை உயர்மட்ட அதிகாகளினால் மூடி மறைக்கப்படுவது வழமையாகி விட்டது. மேற்படி சம்பவங்கள் எதற்கும் இதுவரையில் நியாயமான முறையில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டதாக வரலாறே இல்லை.
இது தமிழர்களின் உயிர், இந்நாட்டு நீதித்துறையால் எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்படுகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயமான நட்டஈடுகள் கூட வழங்கப்படுவதில்லை. அத்தோடு மேற்கொண்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான அக்கறையான நடவடிக்கைகளும் எந்தவொரு அரச தரப்புகளாலும் மேற்கொள்ளப்படுவதுமில்லை. இவ்வாறான சம்பவங்களுக்கான ஏது நிலைகளை தமிழ் அரசியல் கைதிகள் ன் கூட்டியே அதிகாகள் தரப்புக்கு தெயப்படுத்தும் சந்தர்ப்பங்களில் கூட அவை கருத்தில் எடுக்கப்படாது, தட்டிக் கழிக்கப்படுவது இவ்வாறான வன்முறைகளில் அதிகாரிகள் தரப்பு எப்போதும் துணைபோகின்றது என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக் காட்டாகும்.
இவ்விடயத்திலும் தமிழ்க் கைதிகளின் நிலைமை வேலியே பயிரை மேய்வது போன்றதே அண்மைக் காலங்களில் கூட இவ்வாறான பலதாக்குதலுக்கான ஏது நிலைகள் பற்றிய அச்சம் தமிழ்க் கைதிகளால் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே.
தமிழ் அரசியல் தலைவர்களிடம் மற்றும் மனித உமைகளை சமமாக மதிக்கும் மனிதாபிமான அனைத்து தரப்புகளுக்கும் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கைதிகள் தம்மை பாதுகாக்க முன்வருமாறு மன்றாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமே.
இவ்வாறான சூழ்நிலையிலேயே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் மேற் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 90 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மீது அதிகாரிகளின் துணை கொண்டு நூற்றுக்கணக்கான சிங்கள கைதிகள் கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை இலங்கைத் தீவில், தமிழினத்தின் இருப்பின் மீதும் பாதுகாப்பின் மீதும் விழுந்த மாபெரும் அடியாகவே இதை அனைத்து மனிதாபிமான தரப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
வழமை போன்றே இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை இலகுவான முறையில் மூடி மறைக்கவும் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பு முற்றிலும் மாறுபட்ட வகையில் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு துணைபோகும் வகையில் சில வங்குரோத்து அரசியல்வாதிகளும், கருத்து தெரிவித்திருப்பது வேதனையான விடயமாகும்.
இச்சம்பவம் பற்றி பக்கச்சார்பற்ற தரப்புகள் ஊடாக அறியக் கிடைத்த தகவல்களின்படி இந்த தமிழ் அரசியல் கைதிகள் 90 பேர் வரையானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்படாது பல நூறு சிங்கள கைதிகள் தடுத்து வைத்திருக்கும் மற்றைய சிறைக் கூடங்களுடன் ஒன்றித்து உள்ளது.
சாதாரணமாக ஒரு முட்கம்பி வேலியை ஓர் எல்லையாக போடப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பாதை மற்றைய தேவைகள் அனைத்தும் ஒன்றாகவே இருந்து வருகின்றது.
இந்த அமைவிடமானது தமிழ் கைதிகள் மீது எப்போதும் வார்த்தை வன்றைகளும், அடாவடித்தனங்களும் புவதற்கு சாத்தியப்பாடாக இருப்பது, அதாவது தமது பிவுகளில் இருக்கும் கழிவுகளை தமிழ்க் கைதிகள் இருப்பிடங்களில் கொட்டுவது, அவர்களது ஓய்வு இருப்பிடங்களை அசுத்தப்படுத்துவது அவர்களது ஆடைகளை களவாடுவது விடுதலைப் புலிகளின் தோல்வியை தமிழர்களின் தோல்வியாக கூறி ஆத்திரட்டும் கசப்பான வார்த்தைகளை இவர்கள் மீது கொட்டித் தீர்ப்பது போன்றவற்றுடன் இவர்களது பிரிவினை, ஒரு போதைப் பொருள் கடத்தும் பாதையாக பாவித்து வந்தமையே ரண்பாடுகளுக்கான பிரதான காரணமாக இருந்து வருகின்றது.
இவை அனைத்தும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே நடந்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவை தொடர்பாக பல தடவைகள் உயர் அதிகாகளிடம் முறையிட்ட போதும் அவை கருத்திற் கொள்ளப்பட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கும் அதிகாகளுக்கு இவர்களது முறைப்பாடுகள் ஆத்திரமூட்டுவதாக அமைந்து விடுகின்றது.
அத்துடன் சில சிங்கள கைதிகளும் சில அதிகாரிகளும் உயர் அதிகாகளின் முன்பு தமிழ்க் கைதிகள் மீது கொலை வெறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவது கவலைக்குரியது.
குறிப்பிட்ட தினத்தில் ஏற்கனவே முரண்பட்டு கொண்டிருந்த ஒரு அதிகாரி கைதி ஒருவரிடம் சிங்களத்தில் கேட்ட கேள்விக்கு சிங்களம் தெரியாத தமிழ் கைதி பதிலளிக்காததால் ஆத்திரற்ற அதிகாரி அந்த கைதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவ்வேளையில் சிங்களம் தெரிந்த தமிழ்க் கைதிகள் சிலர் எதிர்ப்புத் தெவித்துள்ளனர். அந்த அதிகாரி கடுமையான வார்த்தைகளால் ஏசி அச்சுறுத்தி விட்டு சென்று அருகிலுள்ள கூடங்களில் உள்ள சிங்கள கைதிகள் பலநூறு பேரைக் கூட்டி வந்து இவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அவ்வேளையில் சிறைக் கூடங்களில் ஓடித் தப்பி விட்டவர்களை விட வெளியில் சிக்கிய ஏழு பேர் மயக்கமுறும் வகையில் தாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை வேறு பகுதிகளிலிருந்த அதிகாரிகள் பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஊக்கப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சிறைக் கைதிகளுடன் வந்த தலைமைச் சிறை அதிகாரி இது தொடர்பான விசாரணைக்கென பித்து எடுத்த 5 பேரை அவர்கள் முன்னிலையிலேயே சிங்கள கைதிகள் தாக்கியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அலுவலகத்துக்கு கூட்டிச் செல்லப்பட்ட ஐவரையும் அதிகாரிகள் பலர் இணைந்து கொடூரமாக தாக்கியதுடன் இவ்விடயம் தொடர்பாக யாரிடம் வெளியிடக்கூடாது என அச்சுறுத்தியுள்ளனர்.
அத்தியட்சரின் உத்தரவின் பேல் இவர்களது சிறைக்கூடம் சல்லடை இடப்பட்டு இவர்களது சட்டபூர்வமான உடைமைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து இவர்களைப் பார்க்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான பெ. இராதாகிருஷ்ணன், டாக்டர் ஜயலத் ஜயவர்தன போன்றோரை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அனுமதியாது அலுவலகத்துடன் திருப்பி அனுப்பி விட்டனர்.
ஆயினும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே தீவிர முயற்சியினூடாக சம்பவ இடத்திற்கு சென்று கைதிகளை சந்தித்து உண்மை நிலைகளை அறிந்து வந்தது. ஆயினும் அவர்கள் இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தி அறிக்கை விடுவதில்லை என்பது அவர்களது சங்கத்தின் கொள்கை நிலைப்பாடு. ஆகவே இச்சம்பவம் மூடி மறைக்கப்படும் நிலை அதிகமாக உள்ளது. இந்நிலையில் இக்கைதிகளின் இச்சம்பவத்திற்கான நீதி விசாரணைகள் ஊடாக சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தமது பாதுகாப்பிற்கென உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடத்தில் கரிசனை கொண்டு செயற்பட்டு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் அனைத்து நாடாளுமன்ற தமிழ் அரசியல்வாதிகளிடம் மற்றும் மதத் தலைவர்களிடம் மனித உரிமைகளை மதிக்கும் அனைத்து தரப்பினடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment