உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 12-ல் சந்திப்பு?
உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுவாழ்வுப் பணியை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசித்து திட்டம் தீட்டவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பு – வடமாகாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட உடன்பிறந்த உறவுகள் 3½ லட்சம் மக்கள் அகதிமுகாமில் சொல்லொணாத் துயரத்தினை அனுபவித்தவேளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒருவேளை உணவினைக்கூட வழங்க முன்வராத இந்த வள்ளலார்களா வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவ முன்வருபவர்கள். பல வருடகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தினை கண்டுரசிப்பதற்க அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளமையை பயன்படுத்தவதற்காகவே இவர்களின் பயணம் அமையப்போகின்றதே தவிர அங்கு எந்தவித முதலீடுகளையும் செய்யுமளவிற்கு அவர்களின் மனோநிலை மாற்றமடையவில்லை என்பதே ஜதார்த்தம். இந்த உண்மையினை எதிர்காலம் எடுத்தியம்பும் என்பதே எமது கருத்தாகும்.
அறிக்கைபற்றிய மேலதிக விபரங்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் உலகம் முழுவதும் வசிக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த 30 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் மறுவாழ்வுப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மறுவாழ்வுப் பணியில் பங்கேற்க உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின் பேரில், ஈழத்தமிழர்கள் தற்போது சந்தித்து மறுவாழ்வு திட்டத்தை தீட்டவுள்ளனராம்.
மஹாவலி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment