துரிதமாக மீண்டெழுந்து வரும் யாழ். குடாநாடு
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் யாழ்குடாநாடு பல்வேறு துறைகளிலும் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருவதை கண்கூடாகக் காண முடிகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி போன்ற பல்வேறு துறைகளும் நீண்ட காலத்துக்குப் பின்னர் முன்னேற்றமடையத் தொடங்கியுள்ளன. அதே சமயம் யாழ்குடாநாட்டில் தொழில் வாய்ப்புகளும் பெருகி வருவதைக் காண முடிகிறது.
வட பகுதியில் முதல் தடவையாக தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் எண்ணூறு பேர் பொலிஸ் சேவையில் இணைந்து ள்ளனர். வட பகுதியைப் பொறுத்தவரை இதுவொரு வரலாற்றுப் பதிவு ஆகும்.
வட பகுதி இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைப்பதென்பது ஒருபுறமிருக்க பொலிஸ் சேவையில் அவர்கள் இணைந்துகொள்வது முக்கிய விடயம்.
தமிழ் மொழியில் பணிபுரியக்கூடியவர்கள் பொலிஸ் சேவையில் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு தங்களது தேவையின் நிமித்தம் செல்லும்போது, இலகுவாகக் கருமமாற்ற இதன் மூலம் வழியேற்படுகிறது. தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்ப்பதென்பது மொழி ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கவே செய்யும்.
இவ்விடயத்தில் அன்றைய காலப்பகுதி சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப் பட்டமை இங்கு ஞாபகம் வருகிறது. யாழ். குடாநாட்டில் புதிதாக நியமனம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருசிலர் அங்கு வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் புலிகளால் அநியாயமாக வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த அச்சம் காரணமாக பொலிஸ் துறையில் சேருவதற்கே தமிழ் இளைஞர், யுவதிகள் அஞ்ச வேண்டியிருந்தது. இதனால் தொழில் வாய்ப்பையும் அவர்கள் இழந்தனர். இவ்வாறானதொரு நிலைமை இன்றில்லை. வடக்கில் மாத்திரமன்றி நாட்டின் எப்பகுதியிலும் தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் துறையில் சேர்ந்து பணியாற்றுவதில் தற்போது எந்தத் தடையுமே இல்லை.
இது ஒருபுறமிருக்க யாழ்குடாநாட்டில் கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளும் வேகமாக வளர்ச்சிய டைந்து வருகின்றன. யாழ். போதனா வைத்திய சாலையை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இத ற்கு உதாரணமாகக் கூறலாம்.
யாழ். வைத்தியசாலையில் ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப் படவுள்ளன. நவீன வசதிகளுடனான அம்பியூலன்ஸ் வண்டியும் பரிசோதனைக் கருவிகளும் வழங்கப்படவு ள்ளன. அன்றைய காலத்தில் யாழ். குடாநாட்டிலிருந்து அவசர நோயாளர்களை கப்பல் மூலமே கொழும்புக்குக் கொண்டு வர வேண்யிருந்தது. கப்பல் பயணத்தின்போது நோயாளர் கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
தற்போது வைத்தியத்துறை அங்கு நவீனமடைந்து வரு கிறது. யாழ். வைத்தியசாலையை நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு நிகராக அபிவிருத்தி செய்வதே அரசின் இலக்காக உள்ளது.
இதுபோலவே அங்கு தொழில்துறைகளும் அபிவிருத்திய டைந்து வருகின்றன. முன்னைய காலத்தில் விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இதற் கொரு காரணமாகும். அதேசமயம் தொழில்துறைகளு க்கான ஊக்குவிப்புகளையும் அரசாங்கம் தற்போது வழங்கி வருகிறது.
யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் யாவும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் வடபகுதியை மீளக்கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள துரித திட்டங்களால் ஏற்பட்டவையா கும். யாழ். குடாநாடு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டெழுந்து வருவதை நாம் இப்போது நேரில் காண்கிறோம்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment