இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியான பிரபாவின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல அது ஒரு பெண் போராளி . வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப் பெண்போராளி, இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இசைப்பிரியா இறுதியாக நடித்த வேலி குறும்படம் இங்கே
இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியாவாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை எனவும் அதனை ஒத்த சடலம் என இணையத்தளங்களில் வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் சிறீலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment