எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லைங்கோ
மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பிட்ட இயக்கம் தமிழ் நாடுகோரி போராடப்போவதாக அறிவித்துள்ளதாக Times on line இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த செய்தியில் : அவ்வமைப்பிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் பின்புலத்தில் உள்ளதாகவும் அவர்களது போராட்டத்திற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் உதவி புரியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், பாலஸ்தீன அரசாங்கம் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அரசாங்கத்திற்கு போதுமான உதவிகளைச் செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் தொடர்ந்தும் தனது உதவியை புரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இவ்வாறு ஓர் அமைப்பு இருப்பதாக தாம் அறிந்ததில்லை. இந்த நிலையில் இந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறீலங்கா அரசுடன் தாம் சிறந்த உறவினை கொண்டுள்ள நிலையில், இவ்வாறான குழுக்களுக்கு ஆரவு வழங்க தமக்கு அவசியம் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment