மரியாதைக்காக தலை குனிவது தவறா?
எப்படி நீ தலை குனிந்தாய்? அமெரிக்காவின் கௌரவத்தையே கவிழ்த்து நாசப்படுத்தி விட்டாயே! ஏதோ தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்பதைப் போலல்லவா செய்து விட்டாய். இது தேசத்துரோகம் என்கிற அளவுக்கு அவர்கள் போய்விட்டார்கள் முதன் முதலாக ஜப்பான் சக்கரவர்த்தியை ஒபாமா சந்திக்கிறார். அவருக்குரிய மரியாதையைத் தரும் வகையிலும், ஜப்பானிய வழக்கப்படியும் தான் அப்படிக் குனிந்து வணங்கினாரே தவிர இது அமெரிக்காவுக்கு அவமரியாதை தரும் செய்கை அல்ல என்று அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம் கொடுத்தும் அதை அவர்கள் ஏற்பதாக இல்லை.
ஒபாமா மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டு இது முதன் முறை அல்ல, முன்னர் ஒரு முறை சவுதி மன்னரைச் சந்தித்த போதும் இப்படித்தான் குனிந்து வணங்கினார். அதற்கும் ஏகமாய் எதிர்ப்பு கிளம்பியது. தன்னுடைய சர்வதேச குல மரபை ரொம்பவும் தான் ஒபாமா காட்டிக் கொள்கிறார் என்று கூட ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment