புலிகளின் மூன்று கப்பல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் கே.பியிற்கு சொந்தமான கப்பல்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடக மத்திய நிலையம் கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தது. கே.பியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் 5 கப்பல்கள் அவருடையது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 3 கப்பல்களை இலங்கை கடற்படையினர் கொழும்பு கொண்டு வந்துள்ளதாக `தி ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வெளிநாட்டுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி இலங்கைக்கு கொண்டு வருவதுடன், மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை விரைவில் கைது இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்புத்துறை வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment