நீண்டகால அவலம் நீங்கியது
யாழ்குடாநாட்டு மக்களின் மிக நீண்டகாலப் பிரச்சினை யொன்றுக்கு தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. கொழு ம்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கோ அல்லது யாழ்குடாநாட்டிலிருந்து கொழும்புக்குப் புறப்படுவதற்கோ மக்கள் இனிமேல் அவதியுற வேண்டிய அவசியம் இல்லை. கொழும்புக் கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மக்கள் இப்போது தரைமார்க் கமாக தாராளமாகப் பயணம் மேற்கொள்வதற்கு வழியேற்பட்டுள்ளது.
யாழ்குடாநாட்டு மக்கள் இதுவரை காலமும் அனுபவித்து வந்த பெருந்துன்பம் இப்போது நீங்கியிருப்பது அவர்களுக்கு மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக் கும் இடையிலான பயணத்துக்கென விமானக் கட்டணமாக பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் இனிமேல் கிடையாது. அது மாத்திரமன்றி யாழ்குடாநாட்டிலிருந்து மக்கள் கொழும்புக்குப் புறப்படுவதாயின் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெற வேண்டிய கெடுபிடியும் இப்போது இல்லை.
ஏ-9 வீதி ஊடாக தனியார் வாகனங்கள் பாதுகாப்பு அனுமதி எது வுமின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள் ளது. தரைமார்க்க பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கள் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன.
ஏ-9 வீதியில் வழமையான பஸ் போக்குவரத்து எப்போது ஆரம்ப மாகுமென ஏங்கியிருந்த மக்கள் இன்று நிம்மதியடைந்துள்ளனர். கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் வடபகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் தங்களது வீடுவாசல்களையும் உறவினர்களையும் பார்ப் பதற்காக யாழ்ப்பாணத்துக்குப் புறப்படுவதற்குத் தயாராகி வருவதைக் காண முடிகிறது. அதேசமயம் யாழ்குடாநாட்டிலிருந்து தென்பகு திக்குப் புறப்படுவதற்காக பெருமளவு மக்கள் ஆயத்தமாகு வதையும் அறிய முடிகிறது.
இவ்வாறானதொரு இலகுப்பயணம் இத்தனை விரைவில் ஆரம்பமாகு மென வடபகுதியைச் சேர்ந்த மக்கள் கனவில் கூட நினைத் திருக்க மாட்டார்கள். தாங்கள் எதிர்கொண்டுள்ள பயண அவலம் எக்காலமும் தொடருமென்றே அம்மக்கள் நினைத்திருக்கக் கூடும்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நீங்கியுள்ள துன் பங்களில் இதுவே பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். மக்களிடம் வெளிப்படும் மகிழ்ச்சியிலிருந்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதேசமயம் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையே பயணம் செய்வதில் கடந்த காலத்தில் மக்கள் எதிர்கொண்ட பெரும் துன்பங்களை இவ்விடத்தில் மீட்டுப் பார்ப்பது மிகவும் பொரு த்தமாகும்.
கிளாலி கடலேரி வழியாக இரவு நேரத்தில் பெரும் அச்சத்தின் மத்தியில் உயிரைக் கையில் பிடித்த வண்ணம் சிறிய படகுகளில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாகப் பயணம் செய்ததை இலகுவில் மறந்துவிட முடியாது. இப்பயணங்களின் போது தங்களது உயிரை அநியாயமாக இழந்தோர் அநேகம். இவ்வாறான துன்பப் பயணமானது அக்காலப் பகுதியில் வருடக் கணக்கில் தொடர்ந்தது நினைவிருக்கலாம்.
இன்னும் சில காலப் பகுதியில் கேரதீவு - சங்குப்பிட்டி கடல் பயணம். இதுவும் ஒருவகையில் துன்பம் நிறைந்தது. இது போன்ற பயணங்களுக்கு அஞ்சி யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே விமானத்தில் நிம்மதியாகப் பயணம் செய்வதற்கும் புலிகள் இடமளிக்கவில்லை. இப்பயணத்தின் போது விமான மொன்றைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர். அவ்விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேருமே நடுக்கடலுக்குள் பரிதாபமாக காணா மல் போனார்கள்.
இதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கும் தென்பகுதிக்கும் இடையே மக் கள் கப்பல் மூலம் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டது. இப் பயணம் பெரும் உடல், உள உளைச்சல் நிறைந்ததாகக் காணப் பட்டது. கொழும்பிலிருந்து பாதுகாப்பு அனுமதி பெற்றுப் புறப்படு வோர் திருமலையில் நீண்ட நாட்கள் காத்திருந்து கப்பலில் புறப்பட வேண்டியிருந்தது.
கப்பல் பயணத்தின் போது ஒரு சிலர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கப்பலுக்குள்ளேயே பிரசவங்களும் நடந்துள்ளன. யாழ்குடாநாட்டிலிருந்து அவசர நோயா ளர்களை மேலதிக சிகிச்சைக்காக கப்பலிலேயே கொழும்புக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இவையெல்லாம் யாழ்குடாப் பயணத்தின் மறக்க முடியாத அவலங்களாகும்.
புலிகள் அக்காலப் பகுதியில் முன்னெடுத்த யுத்தம் காரணமாகவே இத்தகைய அவலங்களை பயணிகள் சந்திக்க வேண்டியிருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடபகுதியை வழமை நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் துரித திட்டங்களில் ஒன்றாகவே குடாநாட்டுப் பயணமானது தற்போது இலகுவாகியுள்ளது.
ஏ-9 தரைவழிப் பயணம் வழமை நிலைமைக்கு வந்திருப்பதன் விளைவாக யாழ்குடாநாட்டில் பல்வேறு துறைகளும் இனிமேல் துரிதமாக அபிவிருத்தியடையுமென நாம் எதிர்பார்க்கலாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment