புலிகளின் நகைச்சுவைகள்
ஒரு முறை பிரபாகரனும் கருணாவும் தத்தமது போராளிகள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
கருணா, "எனது போராளிகள்தான் சிறந்தவர்கள். அவர்கள் முதலில் சிந்திக்கிறார்கள், பிறகு செயல்படுகிறார்கள்" என்று கூறினார்.
பிரபாகரன், "இல்லை.. இல்லை. எனது போராளிகள்தான் சிறந்தவர்கள். எனது போராளிகள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார்.
அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு பேரின் போராளிகளையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள்.
கருணா தனது போராளி ஒருவனை அழைத்து, "வீரனே, தேசியத்தலைவரை சென்று தாக்கு" என்றார். கருணாவின் போராளி சற்றே யோசித்து, "இல்லை, என்னால் நம் நண்பரைத் தாக்க முடியாது" என்றான்.
பிரபாகரன் தனது போராளியிடம் "இதோ, இந்த கருணாவை பலமாகத் தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே கருணாவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார்.
அந்த போராளி கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த பிரபாகரன், அந்த போராளி போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன் நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன்.
அந்த போராளி சொன்னான், "இல்லை.. தாக்கியது மட்டும் போதுமா அல்லது கொல்லவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான்.
புலிகளின் ஒரு உளவு விமானம் கொழும்பிற்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை இலங்கை ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த இலங்கை ராணுவ அதிகாரி புலிகளின் விமான ஓட்டியிடம், புலிகளின் போர் விமானம் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாது என்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. இலங்கை ராணுவத்தினரே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை வன்னிக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
வன்னி சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "எங்களுடைய விமானத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அது தெரியாமல் இலங்கைப் படைகளிடம் பிடிபட்டால் செம உதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்" என்றான்.
ஒரு முறை பொட்டம்மான் பிரபாகரனிடம் "103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?" என்று கேட்டார்
"104" என்று பிரபா உடனே பதில் சொன்னார்.
"அதான் இல்லை.. நடுவுல ‘0' தான் இருக்கு. நீ இன்னும் மத்ஸ்ல (maths) வீக்குதான்!" என்றார் பொட்டம்மான்.
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment