திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல்,வவுனியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது
பிரபாகரனின் தந்தையாரது பூதவுடலை தாம் இன்று படையினரிடம் இருந்து பொறுப்பேற்று வவுனியாவுக்கு எடுத்துச்சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாளை காலை பூதவுடலை, ஏ 9 வீதியின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்சென்று வல்வெட்டித்துறையில் உள்ள, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது வீட்டில், அஞ்சலிக்காக, வைத்த பின்னர், நாளை மறுநாள், 12 மணியளவில்,ஊரணி மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, தமது வேண்டுகோளின் பேரில் பிரபாகரனின் தாயும் இராணுவ காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment