தேர்தல் கூட்டத்திற்கு பொதுமக்கள் வராததால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மாகாண சபை உறுப்பினரைத் தாக்கியுள்ளார்
வீரகெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ பிரதேசத்திற்குப் பொறுப்பான மாகாண சபை உறுப்பினர் கபில திஸாநாயக்கவை கடுமையாக திட்டியதுடன் அவரைத் தாக்கியதாகவும் தெரியவருகிறது.
வீரகெட்டிய பிரதேசம் ஜனாதிபதியின் அரசியல் பிறப்பிடமாகும். ஜனாதிபதி தாக்கிய கபில திஸாநாயக்க ஜனாதிபதியின் உறவினராவார்.
மெதமுலன வளவில் வைத்தே அவர் தாக்கப்பட்டுள்ளார். கபில திஸாநாயக்க கடந்த
தென் மாகாண சபைத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குப் பட்டியிலில் நான்காம் இடத்தைப் பெற்றதுடன் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment