அழகிய பாடகி எங்கே….?
இதனையடுத்து ஷிராந்தி ராஜபக்ஷே ஆத்திரமடைய, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் இந்தப் பாடகிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷேவுக்கு பயந்து, ரகசியமான இடமொன்றில் இந்தப் பாடகி மறைந்து வாழ்வ தாகக் கூறப்படுகிறது.
பாடகி சஹோலி கமகே, ‘இளைஞர்களுக்கான எதிர்காலம்’ அமைப்பில் இருப்பதாகவும், இவரை நாமல் ராஜபக்ஷேவும் நன்கு அறிவார் என்றும் கூறப்படுகிறது. குறித்த பாடகியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என்று நாமல் ராஜபக்ஷேவுக்கும் அறிவித்திருக்கும் ஷிராந்தி ராஜபக்ஷே, இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற விளம்பரத் தொடரில் அவரை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது!’
- இதுவே அந்தச் செய்தி!
குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்து இது குறித்து விசாரிக்கப் புகுந்தபோது முதலில் நமக்குக் காணக் கிடைத்தது சஹோலி ரோசனா கமகே இடம்பெற்று, பாடியுள்ள அந்த பாடல் காட்சி!
எந்தவொரு முன்னணி நடிகைக்கும் குறையாத கவர்ச்சியும் அழகும் கொண்டிருக்கும் இந்தப் பெண், இன்னும் பல அழகியருக்கு நடுவில் நின்றும், நடந்தும்… அபிநயங்கள் பிடித்தும் பாடுகின்ற அந்தப் பாடல் கீழ்க்கண்டவாறு போகி றது. இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல… அது யாரும் தட்டிக் கேட்கவியலாத ஒரு மன்னராட்சிதான் என்பதை இங்கு வெளியிட்டு இருக் கும் பாடலில் ஒரு பகுதியே உறுதி செய்கிறது! அந்தப் பாடலைப் பாடி, நடித்திருப்பவரை சஹேழீ கமகே என்று அதன் டைட்டிலில் குறிப் பிடுகிறார்கள்.
இந்த பாடல் ஆல்பம் வெளியான சில தினங்களில் இருந்து சஹேழீ கமகே எங்கே போனார், என்ன ஆனார் என்று தெரியாமலே இருப்பதால், கட்டுரை யின் ஆரம்பத்தில் நாம் சொன்ன இணையதள செய்திகளுக்கு வலு கூடியிருக்கிறது!
இலங்கைப் பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். ”ராஜபக்ஷேவுக்கு நாமல், ரோஷித, யோஷித என மூன்று புதல்வர்கள். நாமல், ‘நில்பலகாய’ எனப்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக தன் தந்தையுடன் அரசியல் விவகாரங்களை கவனிக்கிறார். ரோஷித கடற்படையிலும், யோஷித படித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அரசின் சார்பில், நாட்டில் இளைஞர்களுக்காக மேற்கொள்ளப் படும் திட்டங்களை செயல்படுத்தும் ‘தாருண்யட ஹெடக்’ என்ற இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் அமைப்பாளராக நாமலை நியமித்திருந்தார் ராஜபக்ஷே. அதிபர் தரப்பின் தேர்தல் பிரசார வேலைகளை முன்னெடுத்துச் செல்வதும் நாமல் ராஜபக்ஷேதான்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் போன்றோரையும் பிரசாரத்துக்கு அழைத்திருந்தார் நாமல். அந்த அரசுக்கே உரிய வகையில் இவர்களை ‘இறுக்கி அரவணைத்து’ பிரசார களத்தில் இறங்க வைத்தும்விட்டார்கள். தங்களுக்கு ஆதரவாக மேடை யில் முழங்கியவர்களுக்கு ஒரு மேடைக்கு ஐந்து லட்ச ரூபாய் பணம் தரப்பட்டதாகச் பேச்சிருக்கிறது. எதிர்க் கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்த கதையும் நடந்தது” என்று முன்னோட்டம் கொடுத்த இந்தப் பத்திரிகையாளர்கள்,
”சஹேழீ கமகேவுக்கு இங்கே எப்போதுமே ஒரு தனி கவர்ச்சி உண்டு. அவர்தான் தன் தந்தைக்கான பிரசார இசை ஆல்பத்தைப் பாட வேண்டும் என உத்தரவிட்ட நாமல், சஹேழீயிடமே பேசி சம்மதிக்க வைத்தார்.
கொழும்புவில் பிறந்த இந்தப் பெண்ணுக்கு 21 வயதுதான் ஆகிறது. அமெரிக்கன் மெடிக்கல் காலேஜ் ஆஃப் ஸ்ரீலங்காவில் டிகிரி படித்து வருகிறார். இரண்டரை வயதிலேயே சுட்டி மாமா என்ற பெயரில் இவருடைய தமிழ் பாடல் ஆல்பம் வந்திருக்கிறது. இலங்கையின் அரச தொலைக்காட்சி யான ரூபவாஹினியில் ‘அதிரு மிதிரு, ஹ§ம்டி டம்டி, லபட்டி பிலா’ போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியும் கலக்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட இவர் வெளியிட்ட இசை ஆல்பம் இலங்கை இளைஞர்கள் மத்தியில் பெரிய ஹிட். இந்தியன் கிளாசிக்கல், கர்னாடிக், போஃக் மியூசிக், ஸ்டேஜ் டிராமா ஸ்டைல், வெஸ்டர்ன் என கலந்துகட்டி வெளிவந்த அந்த ஆல்பத்தின் மூலம் இலங்கையின் கனவுக் கன்னியாகவே மாறிப் போனார்!” என்று அந்த அழகுப் பெண்ணைப் பற்றியும் வரலாற்றுக் குறிப்பையும் சொல்லி முடித்தார்கள். அடுத்து வந்தார்கள் விஷயத்துக்கு – ”ராஜபக்ஷேவையும் இந்தப் பெண்ணையும் நேருக்கு நேராக சந்திக்க வைத்தது என்னவோ இந்த அரசர் வாழ்த்துப் பாடல் ஆல்பம்தான். சிங்களம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலுமே இதில் தானே பாடி நடித்தார் சஹேழீ. அதை வெளி யிட்டவர் அதிபர் ராஜபக்ஷே! முகம் கொள்ளாத சிரிப்போடு நிகழ்ந்தது அந்த வெளியீட்டு சந்திப்பு! அதன் பிறகுதான் இணைய தளத்திலும், அரசு வட்டாரங்களிலும் அந்த சூடான செய்தி இறகு கட்டிப் பறக்கிறது! ஆல்பம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி முடிந்ததும் சஹேழீயுடன் அதிபர் ஒரு சந்திப்பு நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு ஓரிரு தினங்கள் கழித்து இவரை தன் மகன் பொறுப்பில் உள்ள இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பில் ஓர் அமைப்பாளராக நியமித்தார் அதிபர். நாமல் ராஜபக்ஷேவுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் சஹேழீ கிட்டத்தட்ட சரிக்கு சமமான பதவியில் அமர்த்தப்பட்டது, அதிபர் மனைவியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது நியாயம்தானே!
அதைத் தொடர்ந்து சஹேழீயுடன் எந்த உறவையும் பேண வேண்டாம் என நாமலுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார் ராஜபக்ஷேவின் மனைவி யான ஷிராத்தி. ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் அதிபரைக் கட்டிப் போடவில்லை என்பதை போகப் போகத் தெரிந்துகொண்டார் ஷிராத்தி. எப்போதும் தன் உறவினர்கள், நண்பர் களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கக் கூடிய சஹேழீ திடீரென எங்கோ மறைந்து போனார். அவரது பெற்றோர் தவித்துப்போய் அரசு அதிகாரிகளிடம் முறையிட் டனர். ஆனால், அந்தப் பெண்ணின் நடவடிக்கைகள் பிடிக்காத யாரோ ஒரு பவர்ஃபுல் வி.வி.ஐ.பி-தான் தனது பாதாள குழுக்களின் உதவியோடு அவரை யாருக்கும் தெரியாத இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டார் என்று செய்தி பரவியது.
இந்த பதுக்கல் விவகாரம் அதிபருக்குப் பிடிக்காமல் போனதாகவும், நீண்ட குடும்பப் போராட்டத்துக்குப் பிறகு கொழும்பின் புறநகரில் ஓர் ரகசியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சஹேழீ விடுவிக்கப்பட்டார் என்றும் தெரி கிறது.
ஆனால், அதன் பிறகும் அதிபரின் மனைவியை ஆக்ரோஷப்படுத்தும் விதமான சந்திப்புகள் தொடர்வதாகவும், இதன் மூலம் எழக்கூடிய அபாயங்களை சஹேழீயேகூட விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது. அதிபரின் மனைவியான ஷிராத்திக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வழங்கப்பட்ட கஜபா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் தன் உயிருக்கே ஆபத்து வருமோ என்று அச்சத்தில் இருக்கிறார் அந்தப் பெண். ஆனால், அவர் நிலை இருதலைக் கொள்ளி எறும்புதான்!
ஜனவரி 2-ம் தேதி முதல் யாருடைய தொடர்பிலுமே சிக்காமல் தலை மறைவாகி விட்டார் சஹேழீ. அதிபருக்கு மிக வேண்டியவர்கள்தான் அவரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று ஒரு தரப்பும், அந்தப் பெண்ணே பிரச்னைகளுக்குப் பயந்து வெகுதூரம் சென்றுவிட்டார் என்று மறு தரப்புமாகக் கூறி வருகின்றன. இந்த மாதிரியான செய்திகள் மீடியாக்களில் வரக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறது அதிபர் மாளிகை. ஆனாலும் ஒரு சில சிங்களப் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் இது போன்ற விஷயங்கள் கசிந்துள்ளன.
எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை. அம்பாந்தோட்டை, நூவரொலியா உள்ளிட்ட சில இடங்களில் நடந்த பிரசார மேடைகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இதைத் தொட்டுப் பேசியுமிருக்கிறார்கள்…” என்று நீளமாக விவரித்து முடித்தார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்.
இலங்கையில் நடக்கிற எதுவுமே உறுதியான செய்தி யாகவோ, முழுமையான வதந்தியாகவோ ஒதுக்கிவிட முடியாதபடி இருக்கிறது. அது அந்த நாட்டை ஆள்வோருக்கு எத்தனை சாதகமோ… அத்தனை பாதகமும்கூட!
- மு.தாமரைக்கண்ணன்
– நன்றி: ஜூனியர் விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment