மாமனிதர் திரு. வெங்கடம் வேலுப்பிள்ளை!
இலங்கையில் கடந்த முப்பது வருடமாக புலிகள் என்ற பயங்கரவாத இயக்கம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தி வந்த பிரபாகரன் என்ற உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதியின் தந்தை காலமாகிவிட்டார். இந்தியாவில் உள்ள கேரள மாநிலம் கொச்சினை பிறப்பிடமாகவும் இலங்கையை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டவர். மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட வேலுப்பிள்ளை பிழைப்புக்காக இலங்கை வந்து வல்வெட்டித்துறையில் திருமணம் செய்துகொண்டார். அவர் தனது பெண் பிள்ளைகளை சிங்கள மொழியிலேயே கல்வி கற்பித்தார்.
1980 களில் மனைவியுடன் இந்தியா சென்ற அவர் திருச்சியில் பலகாலமாக வாழ்ந்து வந்தார். புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் பிரபாகரனின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை சென்ற அவர் அங்கு நடந்த இறுதி யுத்தத்தில் வன்னியில் சிக்கிக் கொண்டார். அவரின் இரத்த உறவினராகிய கேரளாவைச் சேர்ந்த ஓரிருவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை செல்லலாம் என அறியப்படுகிறது.
பிரபாகரன் தனது மாமனார் இறந்ததும் நாட்டுப்பற்றாளர் பட்டம் கொடுத்து மகிழ்ந்தார். ஆனால் தந்தை இறந்து விட்டார். பட்டம் கொடுப்பது யார்?
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறிவரும் நெடுமாறன் தந்தையின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்வாரா?
(பரபரப்பு)
0 விமர்சனங்கள்:
Post a Comment