ஹெய்ட்டி பூகம்பத்தையடுத்து முழுநேர மீட்புப் பணிகளில் இலங்கைப் படையினர் ஈடுபாடு-
ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்வையடுத்து அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் முழுநேர மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்சமயம் அங்கு இலங்கையைச் சேர்ந்த 950படையினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாரிய நில அதிர்வு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து சுமார் 15கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் இலங்கைப் படையினர் கடமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இலங்கைப் படையினர் ஏனைய மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றுவதிலும், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ உதவிகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பூகம்பத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை 2லட்சமாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட 40ஆயிரம் உடல்கள் கூட்டம்கூட்டமாக பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டு வருகின்றன. மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கூறப்படுவதுடன், பாதிக்கப்பட்டோர்க்கு போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்கவில்லையென தெரியவருகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment