GTV யும் குவாலிட்டியும் (quality)
கடந்த வாரம் பெண்மணி ஒருவர் GTV தொலைக்காட்சி கலையகத்துடன் தொடர்புகொண்டு ஒரு யோசனை கலந்த கோரிக்கையை அவர்களிடம் முன்வைத்துள்ளார். அதாவது, சிறுவர்களின் கல்வி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியினை இந்த GTV யில் ஒளிபரப்பிவந்தால் மிகவும் நல்லது. இதன்மூலம் ஐரோப்பாவில் வாழும் பல சிறுவர்கள் பயனடைவார்கள். ஆகவே இதற்கு உதவிபுரியும் நோக்குடன் எனது இடத்தில் ஒரு இடத்தை (hall) ஒழுங்குசெய்து அங்கு நிகழ்ச்சிகளை தயாரித்து அதனை DVD யில் பதிவு செய்து உங்களுக்கு அனுப்புகின்றேன். இதனை நீங்கள் GTV யில் ஒளிபரப்புவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு கலையகத்தில் இருந்த ஜம்புவான் சொன்ன பதில் "ஓகே நீங்கள் DVD பதிவுசெய்து அனுப்புங்கோ. ஆனால் அந்த DVD நல்ல தரமுள்ளதாக (quality) இருக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் அதனை ஒளிபரப்பமாட்டோம்" என்றாராம்.
அந்த ஜம்புவானின் பதில் மூலம் "நாங்கள் அதனை ஒளிபரப்ப முடியாது என்பதனை நாசூக்காக சொல்லியிருக்கிறார்" என்பது தெளிவாகியுள்ளது.
நேற்று GTV யில் நடைபெற்ற "வாடி வதங்கிப்போன வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வயாகரா (Viagra) கொடுத்து உசுப்பு ஏத்தும்" விவாத நிகழ்ச்சியில் இறுதியாக பங்குபற்றிய அப்பெண்மணி தனக்கு நடந்த மேற்படி சம்பவத்தைக்கூறி இதனால் தான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தபோது, அப்பெண்மணியின் ஒலியை சிறிது சிறிதாக குறைத்தார்கள். நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த ஜெகன் "நீங்கள் எங்களுடைய கலையகத்துடன் மீண்டும் ஒரு முறை தொடர்பு கொண்டு இதுபற்றி விபரித்தால் எமது படக்குழுவினர் உங்களின் இடத்திற்கு வந்து உங்களின் நிகழ்ச்சிகளை அவர்கள் படம்பிடிப்பார்கள்" என்று சொன்னபோது அப்பெண்மணி ஏதோ குறுக்கிட்டு கூறவந்தபோது அவரின் ஒலியை முற்றாக துண்டித்துவிட்டார்கள்.
உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற BBC, CNN, Skynews போன்ற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் சில தரம்குறைந்த வீடியோ காட்சிகளை காட்டுவதற்கு முன்னர் அல்லது அதனைக்காட்டி முடித்த பின்னர் "we apologize for the poor quality" என்ற வாசகத்தை பயன்படுத்தி அக்காட்சி உலக மக்களை சென்றடையச் செய்கிறார்கள். அவர்களது குறிக்கோள் ஒரு விடயம் உலக மக்களை எப்படியாவது சென்றடைய வேண்டும் என்பது.
சரி, இந்த ஐந்து பைசா பெறுமதியில்லாத GTVயில் காட்டப்படும் ஆவணப்படங்கள் யாவும் தரமானவையா??? என்றால் அதுவும் இல்லவே இல்லை.. மிகவும் தரம்குறைந்த ஆவணப்படங்களும் காட்டப்படுவதுமுண்டு. அதற்கு எதுவித மனவருத்தமும் (apologize) தெரிவிப்பதும் கிடையாது. இவர்களது குறிக்கோள் உலகில் உள்ள தமிழர்களை எப்படியாவது முட்டாள்கள்ளாக்க வேண்டும் என்பதுதான்.
தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
தன்னால் மட்டும்தான் முடியும் என்பது தலைக்கணம்
தன்னால் முடியும் என்கிறார் அந்த பெண்மணி
தன்னால் மட்டும்தான் முடியும் என்கிறது GTV.
வாழ்க GTV
0 விமர்சனங்கள்:
Post a Comment