நாடுகடந்தஅரசின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு!
அன்பான பிரதிநிதிகளுக்கு,
அங்குரார்ப்பணவிழாவும் உரைகளும் ஒருபடியாக முடிவடைந்து களைப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வுப்பொழுதில் இந்த அகதித்தமிழனின் மடலைப்படிப்பீர்கள் என்றநம்பிக்கையுடன் எழுதுகிறேன். நாடு கடந்த அரசு என்ற கோட்பாடு யாரால் உருவாக்கப்பட்டது என்றும் அது யாருடைய நலனுக்காக இயங்குகிறது என்றும் இனிவரப்போகும் காலத்திலும் அது எந்த வல்லாதிக்கநலனுக்காக வேலைசெய்யும் என்றும் மிகத்தெளிவாக அடையாளம்தெரிந்தாலும் இந்தக்கடிதத்தின்நோக்கம் அவற்றைப்பற்றி
உங்களுடன் பேசுவதுஅல்ல.
இந்தக்கடிதத்தின் நோக்கம் மிகப்பிழையான நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டஒரு சபையை எப்படி எமது விடுதலைக்காக நாம் மாற்றமுடியும் என்பதைப்பற்றியதாகவே இருக்கும்.
அன்பான பிரதிநிதிகளே, உங்களில் அநேகமானோர் ஏதோஒருவகையில் எமது தாயகத்தின்விடுதலைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவே நாடுகடந்தஅரசின் சபைக்கு போட்டி இட்டு தெரிவாகிஉள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். நன்றிகள் உங்களுக்கு. உங்களிலும் பார்க்க உங்களை தெரிவுசெய்த மக்களுக்குத்தான் பாராட்டுகளும் நன்றிகளும் அதிகம் சொல்லவேண்டும்.
புலம்பெயர்தமிழர்கள் வாழும் நாடுகளின் தமிழ்வாக்காளர்தொகையில் இருபது முதல் முப்பதுவீதமானோரே வாக்களித்து இருந்தபோதிலும் வாக்களித்தோர் தமக்கான பிரதிநிதிகளாக தேசியத்தலைவர் மீதும் மாவீரரின் தியாகத்தின்மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையும்,நேர்மையான உறுதியும் கொண்டோரையே தெரிவுசெய்ததற்காக தலைவணங்குகின்றோம்.
வெறும்அறிக்கைவீரர்களையும்,அரசியல்தரகுசெய்பவர்களையும் நிராகரித்து மக்கள், தேசியத்தின் உண்மையான பணியாளர்களை ;தெரிவுசெய்ததன் பலாபலன் நாடுகடந்தஅரசின் அங்குரார்ப்பணக்கூட்டத்திலேயே தெரிந்தது.
தேசியக்கொடியைபிடிப்பது அவமானம் என்றும்,அவதூறு என்றும் பரப்புரைசெய்த மதி உரைஞர்கள் தேசியகொடியை நிராகரித்தே முதலாவதுகூட்டத்தை தொடங்க எண்ணியிருந்தார்கள். மக்கள் அளித்த தீர்ப்பால் கலங்கிப்போன ம. உரைஞர்கள்
ஏதுமே செய்யமுடியாது போய் இறுதியில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். இதன் வெற்றிமுழுவதும் மக்களுடையதே! இப்போதுபுரிந்திருப்பீர்கள் எமது பிரதிநிதிகளே, மக்களின் உணர்வுகளை நன்றாக.
(1)எனவே இனிவரும்காலங்களில் சும்மா பேசிப்பேசி கலைந்துபோகாமல் தமிழீழ
மக்களுக்கான நிரந்தர சுதந்திரவாழ்வுக்கான செயற்திட்டங்களை வகுத்துசெயலாற்றமுன்வர வேண்டும்.
(2)நாடுகடந்தஅரசு என்ற சபையின் அங்குரார்ப்பணம்முடிந்து 24மணித்தியாலங்களுக்குள் நாடுகடந்த அரசு என்பது தமிழீழமக்களின் அதிஉச்சஅரசியல் தீர்மானமையம் என்றும் நாடுகடந்தஅரசின் தலைவரே தமிழீழதேசியத்தின்தலைவர் என்றும் பிரச்சாரங்கள் எகிறிவிடப்பட்டதை நீங்களும் பார்த்துஇருப்பீர்கள். அந்தபிரச்சாரம் எவ்வளவுதூரம் எமது மக்களை கொதிக்கவைத்தது என்றும் நீங்கள் அறிவீர்கள். வருங்காலத்தில் இத்தகைய சுயதம்பட்டமான பிரச்சாரங்கள் நாடுகடந்தஅரசின் சார்பாக வெளிவருவதை பிரதிநிதிகளாகிய நீங்கள்தான் தடுக்கவேண்டும்.
(3)மக்களின்வாக்களிப்புக்கு முன்னர் இந்த நாடுகடந்தஅரசின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்ட குமரன்பத்மநாதனுடனும்,அவரின் புலத்துகூட்டாளிகளும் தேசிய தலைமையால் முன்னர் விரட்டப்படவர்களுமான ‘நிழல்’ மனிதர்களுடன் இனி மேல் நாடுகடந்தஅரசு எந்தவிதமான நேரடி மறைமுக தொடர்புகளை பேணுவதை மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகள் தடுக்க வேண்டும்.
(4)மக்கள் முன்னிலையில்வந்து தேர்தலில்போட்டியிடாமல் தங்களை ஒரு வழிப்போக்கராக உருவகித்துக்கொண்டு, மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகளைமேய்க்கும் மேய்ப்பராக சிலர் இன்னும்தொடர்கிறார்கள்.அவர்கள் தாமாக வெளியேறாதுவிட்டால் பிரதிநிதிகள் அவர்களை வெளியேற்றவேண்டும்.
(5)நாடுகடந்தஅரசு என்பது மண்டபங்களுக்குள்ளும் குளிர்ஊட்டப்பட்ட அறைகளுக்குள்ளும் நடைபெறும் வெறும் வாய்ப்பேச்சு அல்ல. அதன் உண்மையான நோக்கம் சுதந்திரதமிழீழஅரசு என்பதாக இருந்தால் தமிழீழமக்கள் அவை, தமிழீழபேரவை என்பனவற்றுடன் இணைந்து செயலாற்றமுன்வர வேண்டும்.
(6)தமிழீழவிடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனமானதற்கும், பல்லாயிரம்மக்கள் கொல்லப்பட்டதற்கும்,பலஆயிரம் போராளிகள் கொடுஞ்சிறையில் வாடுவதற்கும்,தமிழீழவிடுதலைத்தளங்கள் ஆக்கிரமிப்பாளனின் கைகளில் வீழ்ந்ததற்கும் பெருந்துரோகமே காரணம்.
அந்த துரோகத்தை நன்குஅறிந்தவர்கள், அந்த துரோகத்தில் பங்குகொண்டவர்கள் இறுதிக்காலத்தில் தேசியத்தலைமை உடன் தொடர்பில் இருந்த சிலராகும். நாடுகடந்த அரசு இந்த துரோகம் சம்பந் தமான விசாரணைக்குழு ஒன்றை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும்,விளக்கங்களையும் பெற்று தமிழ்மக்களுக்கு இறுதிக்காலத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கவேண்டியது நாடுகடந்தஅரசின் பிரதிநிதிகளின் பிரதான கடமையாகும்.எனவே அடுத்த அமர்வில் இது சம்பந்தமாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். நாடுகடந்தஅரசின் பிரதிநிதிகளே, தொடக்கநாள் அன்று நீங்கள் பேச்சில் இருந்து நீங்கள் எல்லோரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விட்டுக்கொடுப்பு இல்லாத ஈடுபாடு உள்ளவர்கள் என்று நம்பிக்கைகொண்டு அதன்காரணமாகவே இந்த மடலை எழுதுகிறேன்.
பேசி பேசி கலைந்துபோய்விடாமல் செயலில் உறுதிகாட்ட வேண்டும். கடந்தமுப்பது வருடங்களுக்கு மேலாக பேச்சைக்குறைத்து வேலைத்திட்டத்தில் மட்டும் வேகமும் உண்மையும்காட்டிய தலைவரின் உதாரணத்தை தொடருங்கள்.
மீண்டும் சந்திப்போம்’
அகதித்தமிழன்
காவியன்.
Tamilspy
0 விமர்சனங்கள்:
Post a Comment