நெருப்புக்கு வந்த மடல்: நாடு கடந்த தமிழீழம் கேட்டவை இன்று இலங்கை அரசிடம் எவ்.எம் வானொலி கேட்கினம்!
புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத போராட்டத்திற்கு துணைநின்று ஏக தலைமை கொண்டாடியவர்கள் கடந்த ஆண்டு விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதும் குத்துக்கரணம் அடித்து நாடு கடந்த தமிழீழம் என்று கூச்சலிட்டவர்களின் சுயரூபம் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
நாடு கடந்த தேர்தல் என்று கோஷமிட்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து மண்கவ்வியதும் தற்போது இலங்கை அரசிற்கு துதிபாடி அன்று துரோகியாக சித்தரித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போற்றிப்பாடி தற்போது எவ்.எம். வானொலிக்கான அனுமதியை இலங்கையில் பெற்றிட துடிக்கின்றனர் கனேடிய வானொலி இயக்குணர்கள்.
சில வாரங்களிற்கு முன்னர் நாடு கடந்த தமிழீழ தேர்தலில் போட்டியிட்ட இந்த வானொலி கோமாளிகள் தம்மைப்பற்றி இவ்வாறெல்லாம் கூறி கனேடிய தமிழ் மக்களை ஏமாற்ற முயன்ற பிழைப்புவாதிகள் ஆவர்.
*தமிழ் ஆங்கிலம் இரு மொழியில் சிறந்த அறிவு
*அரசியல் தீர்க்கதரிசி
*கனேடிய அரசியலில் நீண்டகால அறிவு
தாயக தமிழர்களில் மிகுந்த அக்கறை, தாயக தமிழ்மக்களிற்கு மிகுந்த பங்களிப்பு என்றெல்லாம் பிதற்றியவர்கள். தாயகம், சுயநிர்ண உரிமையுடன் கூடிய தமிழழனே தன்னை ஆழக்கூடிய உரிமையை பெற்றிட தன்னால் முடிந்த முயற்சியை எடுப்பேன் என்று தமிழர்களிற்கு மாயை வித்தை காட்டிய துரோகிகள் அந்த தேர்தல் முடிந்து ஒருசில வாரங்கள் கூட ஆகாத நிலையில், தமது சுயவடிவத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். கடந்த 15 ஆண்டுகளிற்கு மேலாக சிங்கள அரசுகளுடன் கைகோர்த்து தமிழனின் உரிமையை விற்று பிழைக்கும் தமிழ் அமைச்சரை பற்றி இவ்வாறு கூறுகின்றார் வானொலி நிலையமொன்றின் இயக்குணர்.
மாண்புமிகு வடகிழக்கு அபிவிருத்தி அமைச்சர் அவர்களே, எனது வேண்டுகோளுக்கு இணங்கி புலம்பெயர் தமிழ்மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்கூற உடன்பட்டமைக்கு எனது தலைசார்ந்த வணக்கம், உங்களுக்கு எவ்வளவோ அபிவிருத்தி வேலைகள் இருந்தும் அதற்குள் சிறிய நேரம் ஒதுக்கி எனது வேண்டுகோளை நிறைவேற்ற வந்தமைக்கு முதற்கண் நண்றி கூறுகின்றேன்.
நடைமுறைக்கு வராதவற்றையோ, நியாயமாக கிடைக்காது என்று தெரிந்து, அதற்காக காலத்தை வீணடித்து அரசுடன் முரண்படுவதையோ நீங்கள் விரும்பாததுபோல நானும் அதே கருத்தை கொண்டவன் என்பதில் ஜயமில்லை. அரசு தர நினைப்பதை நாம் பெற்றுக்கொண்டு. அதை வைத்து தமிழ் மக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பதுதூன் எனது நிலைப்பாடு. உங்களது கொள்கையின் பின்னால் நான் நிற்பேன் என நம்பிக்கையாக கூறிக்கொள்கிறேன். எனது சொந்த நிதியில் இருந்து 500 டொலர் பணத்தை உடனடியாக உங்கள் பெயரில் அனுப்பி வைக்கிறேன்.
இப்படி புலம்பெயர்ந்த மக்கள் என்னைப்போல் உங்கள் கொள்கையின் பின்னால் அணிதிரளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த வழியை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று பல்டி அடித்தவர்கள்தான் இந்த வானொலி நிலையத்தினர். இந்த கருத்துக்களானது கடந்த நடுகடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டவரும் கனடாவில் உள்ள தமிழ் வானொலி ஒன்றின் இயக்குணர் ஒருவரால் முன்னைநாள் துரோகியும் தற்போதைய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வானொலி நிலையத்தினரால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளாகும்.
பிழைப்புவாத வானொலி இயக்குணரின் இவ்வாறான செயல்பாடுகள் மணித்த மாவீரர், போராளிகள், பொதுமக்களை இழிவுபடுத்தி பிழைப்பு நடாத்துவது வேதனைக்குரியது. இந்த ஈனப்பிறவியை கனேடிய மக்கள் இனம்கண்டு தூக்கி வீசவேண்டும். இந்த கோழைகள் கடந்த காலங்களில் கனேடிய தமிழ்மக்களை ஏமாற்றி பிழைப்பு மேற்கொண்டதுபோல் அல்லல்படும் எமது மக்களையும் ஏமாற்றி பிழைப்பு நடாத்த நாம் இனிமேல் அனுமதிக்ககூடாது.
ஆகவே நேரத்திற்கு ஒரு வார்த்தையும், நாளுக்கு ஒரு கொள்கையும் கொண்ட இந்த வானொலி இயக்குணர்களும், ஒலிபரப்பாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக கனேடிய தமிழர்களை புதைகுழியில் விழுத்தியதுபோன்று யுத்த கோரத்தில் அனைத்தையும் இழந்து நொந்துபோயுள்ள எமது தாயக உறவுகளின் இரத்தத்தையும் உறிஞ்சி தமது வயிற்று பிழைப்பை மேற்கொள்ளவே அமைச்சருடன் உறவு கொண்டு இலங்கையில் ஒர் எவ்.எம் வானொலி நிலையத்தை நிறுவும் கனவுடன் உலா வருகின்றனர்.
1995ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரை புலிகளின் கருத்துக்கு எதிரானவர்களை துரோகியாக தெரிவித்த இவர்களுக்கு இன்றுதான் அமைச்சர் டக்ளஸ் மக்கள் தலைவர்களாக இந்த வானொலி நிலையத்தினருக்கு தெரிந்துள்ளது. தமது பிழைப்புக்காக எந்த நிமிடமும் குத்துக்காரணம் போடும் கோமாளிகள்தான் நாடுகடந்த தமிழீழ பிரதிநிதிகளாக முயன்றவர்கள். இந்த கோமாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இவர்களது செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன. தமது வயிற்று பிழைப்புக்காக எவனையும், பொட்டு கொடுத்தும் காட்டி கொடுத்தும் உயிர்வாழும் இந்த கூட்டத்தினர். இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் துரோகிகளாக சித்தரித்தவர்களுடன் கைகோர்த்து கும்மாளமிட்டு தமது வயிற்றுப்பிழைப்பை நடாத்த முயல்கின்றனர்.
தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணமான இவர்கள் கடந்த காலங்களில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதிசேகரித்து கொடுத்து அவர்களது வானொலியில் சென்று கருத்து கூறுபவர்களை கூட துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறிய காலம் போய், அன்று எந்த அமைச்சரை துரோகிகள் என்று கூறினரோ இன்று அந்த அரச அமைச்சரை செவ்வி கண்டு நீங்கள்தான் உண்மையான மக்கள் தலைவர் என்று புகழ்பாடும் நிலைக்கு வந்துள்ளனர். இந்த கோடரி காம்புகள் குறித்து கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்கள் ஏமாந்தது போன்று எதிர்காலலத்தில் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் ஏமாந்து விட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டு கொள்கின்றேன்.
ஏம்.ரவி
நெருப்பு இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment