புலிகளின் துஷ்பிரயோகங்கள்-ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது - கெஹெலிய
வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும், படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியுள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர், சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்
0 விமர்சனங்கள்:
Post a Comment