700 ஆண்டுகளுக்கு முன் ஆசிய பிராந்தியத்தை உலுக்கிய பாரிய சுனாமி
இந்து சமுத்திர பிராந்தியத்தை 2004 ஆம் ஆண்டு தாக்கிய பாரிய சுனாமிக்கு 700 ஆண்டுகளுக்கு முன், மகா பாரிய சுனாமியொன்று ஆசிய பிராந்தியத்தை தாக்கியதாக அண்மைய ஆய்வொன்று கூறுகிறது.
தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் ?டிவுகள் "நேச்சர்' விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி பிராந்தியத்தில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான பாரிய பூமியதிர்ச்சிகளுக்கு முன் இந்த சுனாமி இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
""சுனாமி என்பது 2004 ஆம் ஆண்டுக்கு முன் நாம் சந்தித்திராத ஒன்றாகவே கருதப்படுகிறது. அத்தகைய அனுபவம் இனி ஒரு போதும் இடம்பெறாது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என தாய்லாந்து சுலாலோங் கோர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான குறுவாவுன் ஜான்கெயூ தெரிவித்தார்.
""இதையொத்த பாரிய சுனாமி எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதை எம்மால் அடையாளங் காணக் கூடியதாக உள்ளது. எனவே, கடற்கரை வாழ் மக்களுக்கு சுனாமி தொடர்பான கல்வியை தொடர்ந்து வழங்க ஊக்குவிப்பது அவசியமாகும்'' என அவர் வலியுறுத்தினார்.
2004 ஆம் ஆண்டு சுனாமியின் காரணமாக கடல் மட்டம் 20 அடிக்கு மேல் உயர்ந்து தாக்கிய தாய்லாந்தின் புகெத்தில் பராதோங் எனும் இடத்திலுள்ள புல்வெளியிலேயே மேற்படி சுனாமி தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
அதேசமயம் கட்ரின் மொனெக் என்பவரின் தலைமையிலான பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிறிதொரு குழுவினர், 35 மீற்றர் உயரத்துக்கு கடல் அலை எழுந்து தாக்கிய ஏஹ் கடற்கரை பிராந்தியத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வின் பிரகாரம் சுனாமியானது அப்பிராந்தியத்தில் 600 வருடங்கள் தொடக்கம் 700 வருடங்களுக்கு முற்பட்ட காலப் பகுதியில் தாக்கியதாக தெ?விக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு சுனாமியால் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய ஆசிய பிராந்திய நாடுகளில் 170,000 பேர் வரை பலியானமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment