சோனியா காந்திக்கும் மிரட்டல் இ-மெயில்
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவவி சோனியா காந்தி அம்மையாருக்கும் இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததாக வாலிபர் ஒருவரை கேரள போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொச்சி அருகே உள்ள பலரிவட்டம் என்ற இடத்தில் உள்ள இன்டர்நெட் கபேயில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த இ மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், டெல்லி, கொச்சி மற்றும் மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடிக்கும். சோனியா காந்தி கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக போலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment