ஒரே சமயத்தில் 750 க்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்
முன்னாள் சோவியத் குடியரசு பிராந்தியமான நொகோர்னி கராபாஹிலுள்ள ஷுவாவில் கடந்த வாரம் ஒரே சமயத்தில் 750 க்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
லெவொன் எய்ரொபெதியன் என்ற வர்த்தகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் திருமண நிகழ்வில், திருமண பந்தத்தில் இணைந்த ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 2000 அமெரிக்க டொலரும் ஒரு மாடும் அன்பளிப் பாக வழங்கப்பட்டது.
திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் ஒரு பகுதியினரையும் அன்பளிப்பாக கிடைத்த மாட்டுடன் செல்லும் ஜோடி ஒன்றையும் படத்தில் காணலாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment