குடை விரிந்த கதை
இன்று நேற்றல்ல, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து விட்டது குடை.
இன்றும் பெரிய மாற்றங் களையோ, பெரிய தொழில்நுட்பத் தாக் கத்தையோ சந்திக்காமலேயே, மனித இனத்துக்குப் பெரும் தொண்டு ஆற்றி வருவது குடை.
வெளியே வேலையாகச் சென்று விட்டு, எதிர்பாராத விதமாக மழை வந்து விட் டால், அப்போது தெரியும் குடையின் அருமை. சுட்டெரிஉக்கும் சூரியன் தந்த வெயிலின் கொடு மையிலிருந்து தன் னைக் காத்துக் கொள்ள, பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் குடையைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான். எகிப்து, ஆசியா, கிரேக்கம், சீனா ஆகிய நாடுகளின் புராதன கலைப் படைப்புக்களில் குடையின் வடிவங்களைக் காண முடிகிறது.
மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் குடையை மாற்றியமைத்தவர்கள் சீனர்களே! வெயிலி லிருந்து காத்துக் கொள்ள அவர்கள் காகிதத்தால் செய்த குடையை உபயோகித் தார்கள். மழை வரும்போது பயன் படாமல் போன தால், அவர்கள் அதில் சிறு மாற்றம் செய்ய வேண் டிய தாயிற்று. குடை செய்யப் பயன்படுத்திய காகி தத்தை மழை நீர் உறிஞ்சா வண்ணம் மாற்றினார்கள். மெழுகு மற்றும் அரக்கு பூசி, காகிதத்தின் மேல் நீர் ஒட்டாமல் உருண்டோடிவிடும் வண்ணம் செய்து விட்டார்கள்.
லத்தீன் வார்த்தையான "அம்ப்ரா'' விலிருந்துதான் ஆங்கில ""அம்ப்ரெலா'' வந்தது. "அம்ப்ரா'' என்றால் நிழல் என்று பொருள். 16ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாடுகளில் குடை உபயோகத் துக்கு வந்தது. அதுவும் பெண்கள் உபயோகிக்கும் தனிப் பொருளாகவே பாவிக்கப்பட்டு வந்தது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீகப் பயணியான ஜோனாஸ் ஹான்வே, பெண்களைப் போலவே குடையை உபயோகிக்கத் தொடங்கினார். இங்கி லாந்து நாட்டின் பொது இடங்களில் சுமார் 30 ஆண்டு காலம் குடையை வைத்துக் கொண்டே சுற்றி வந்தார்.
மெல்ல ஆண்களுக்கும் குடை பிடிக்கும் பழக்கம் வந்தது. அக்காலக் கட்டத்தில் குடை என்பதை அவரது பெயரை வைத்து ஹான்வே என்றே அழைக்கப்பட்டு வந்தது.
குடைக்கென்றே ஒரு கடை 1830ஆம் ஆண்டு லண்டன் நகரில், ஜேம்ஸ் ச்மித் அன் சன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அந்தக் கடை இன்றும் 53, புது ஆக்ஸ் போர்டு வீதி, லண்டன் என்ற முகவரியில் இயங்கி வருவது கூடுதல் சுவாரஸ் யமான தகவல்.
முதலில் செய்யப்பட்ட குடைகள் மரச் சக்கைகள் அல்லது எலும்புகள் கொண்டு தயாரிக்கப்பட்டன. வளைந்த கைப்பிடிகளை கலைஞர்கள் கடினமான மரத்தினால் அழகுடன் கூடிய கலைப்பொருட்கள் போல் செய்து வந்தனர். நீர் உறிஞ்சா கேன்வாஸ் துணிகளைப் பயன்படுத்தினார்கள்.
1825ஆம் ஆண்டுதான், சாமுவேல் ஃபாக்ஸ் என்பவர் இன்றுள்ளது போல் கம்பிகள் கொண்ட குடையை வடிவமை த்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்று, இங்கிலிஷ் ஸ்டீல் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மழையும், பனியும், ஈரப்பதமுமாயிருந்த ஐரோப்பிய நாடுகளில் குடையின் உபயோகம் பன்மடங்கு பெருகத் தொடங்கியது. 1885ஆம் ஆண்டு, வில்லியம் கார்ட்டர் என்பவர் குடைகளை மாட்டும் ஸ்டாண்ட் ஒன்றை வடிவமைத்தார்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே குடையின் அடுத்த பரிணாமம் வளரத் தொடங்கியது. மடக்கி நீளம் குறைத்துக் கொள்ளக்கூடிய குடைகள் வடிவமைக்க ப்பட்டன.
0 விமர்சனங்கள்:
Post a Comment