8 அடி 9 அங்குலத்துக்கு கேசத்தை வளர்த்து 46 வயது பெண்மணி சாதனை
அமெரிக்க புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஆஷா மண்டேலா என்ற 46 வயது பெண்மணி, 8 அடி 9 அங்குல உயரத்துக்கு கேசத்தை வளர்த்து புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார்.
அவரது சாதனை "கின்னஸ்" சாதனைப் புத்தகப் பதிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனது உயரத்தை விட நீளமான இந்த கேசத்தை கழுவ, அவர் ஒவ்வொரு தடவையும் ஒரு போத்தல் "ஷாம்பூ" மற்றும் ஒரு போத்தல் கேச பராமரிப்பு தைலம் என்பனவற்றை உபயோகித்து வருகிறார்.
"நான் முன்பு வாரத்துக்கு மூன்று தடவைகள் எனது கேசத்தை கழுவி வந்தேன். தற்போது வாரத்துக்கு ஒரு தடவை மட்டுமே கழுவுகிறேன். சில சமயங்களில் கேசத்தை கழுவும் போது, எனக்கு மிகுந்த களைப்பு ஏற்படுகிறது" என ஆஷா மண்டேலா கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment