இலங்கையில் ஏகன் ரிலீஸான தியேட்டரில் திரையை கிழித்து நாசம் ,சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து
தீபாவளிப் படங்களில் அனைவராலும் பெரிதும் (குறிப்பாக அஜித் ரசிகர்களால்) எதிர்ப்பார்க்கப்பட்ட மிகப்பெரிய எண்டர்டெய்ன்மெண்ட் ஏகன் . இலங்கையிலும் ஏகன் கொண்கோர்ட் திரையரங்கில் 25-10-2008 காலை ரிலீஸ் செய்துள்ளார்கள்.
படம் ஓடிய அரைமணி நேரத்திற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டு , அடிதடியில் இறங்கி திரையை நாசப்படுத்தி விட்டார்கள். பிறகு போலிஸ் வந்தவுடன் தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.
இலங்கையில் ஏகனை திரையிட உரிமை பெற்ற தியேட்டர் கொண்கோர்ட் தான். இச் சம்பவத்தால் தமிழ் படத்தை திரையிட அனைத்து தியேட்டர்களும் பயப்படுகின்றன.
சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.
நேற்று முந்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் ஈழத் தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரயிடவிடமாட்டோம் என்று ஆர்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.
இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகனை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்பதிப்பையும் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தமிழ்வின் இணையத்தளத்திர்கு கூறியதாவது"
"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்னாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யகூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவுசெய்துள்ளோம்" எனக் கூறினார்.
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=758:2008-10-26-13-53-39&catid=36:2008-09-21-04-33-30&Itemid=103
0 விமர்சனங்கள்:
Post a Comment