பண்டா கரடிகளுக்கு 'ஸ்ட்ரெஸ்' தீர சிக்கன் சூப்!
பீஜிங்:சீன வனவிலங்குப் பூங்காவில் உள்ள பாண்டா கரடிகளுக்கு மனஅழுத்தம் போக, வாரத்துக்கு ஒரு முறை சிக்கன் சூப் தரப்படுகிறது.மத்திய சீனாவில் உள்ள வுகான் வனவிலங்குப் பூங்காவில் இரு குட்டி பாண்டா கரடிகள் உள்ளன. இந்த பூங்காவுக்கு வார இறுதி நாட்களில் அதிக கூட்டம் வரும். சமீபத்தில், வழக்கம் போல, ஒரு வாரம், தேசிய வார விடுமுறை விடப்பட்டது.
ஆண்டுதோறும், ஒரு வாரம் இப்படி விடுமுறை விடப்படும். இந்த நாட்களில், சுற்றுலா வுக்கு சீனர்கள் குடும்பத்துடன் கிளம்பி விடுவர். உள்ளூரில் உள்ள இந்த பூங்காவுக்கு, இந்த ஒரு வாரம் கூட்டம் கணக்கில் அடங்காது. ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் வனவிலங்குப் பூங்காவுக்கு வந்தனர். இந்த பூங்காவில் உள்ள பாண்டா கரடிகள் இரண்டுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அதனால், இந்த இரு கரடிகளுக்கும் தூக்கமே இல்லை.
பார்வை யாளர்களின் அன்புத்தொல்லையால் படாதபாடுபடுகின்றன. இதனால், கரடிகளுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா டாக்டர்கள் கண்டுபிடித்தனர்."பார்வையாளர்களின் அதிகமான கூட்டத்தால், அதிர்ச்சி தாக்கி கரடிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு மனஅழுத்தம் போக்க, ஒரு கிலோ சிக்கனுடன் சூப் தரலாம்' என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.
இதன்படி, கரடிகளுக்கு மற்ற அசைவ உணவுகளுடன் வாரம் ஒரு முறை , ஒரு கிலோ சிக்கனுடன் சூப் அளித்து வருகின்றனர் ஊழியர்கள்."சமீபத்தில் தான், கரடிகளுக்கு சூப் தரும் முறை அமல்படுத்தப்பட்டது. வன விலங்குகளுக்கு இன்னும் அதிக சத்துணவு அளிக்கப்படவேண்டும்.மழைக்காலத்தில் அவற்றின் மன அழுத்தம் அதிக மாக இருக்குமாதலால் அவற்றுக்கு சத்துணவு மிக முக்கியம்' என்றும் டாக்டர்கள் கூறினர். சீனாவில் பூகம்பம் போன்ற நிகழ்வுகளாலும் வனவிலங்குகள் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன என்று வன விலங்கு ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சீனாவின் செல்ல வனவிலங்கு பாண்டா கரடி. அதிகாரப்பூர்வமற்ற வகையில், நாட்டின் தேசிய சின்ன மாக விளங்குகிறது. சிசுவான் மலைப்பகுதி உட்பட சில பகுதிகளில் தான் பாண்டா கரடிகள் உள்ளன. மொத்தம் 1,600 கரடிகள் உள்ளன. இதனால், பாண்டா கரடிகள் மீது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது
0 விமர்சனங்கள்:
Post a Comment