ராவணனுக்கு அஞ்சலி: ராஜஸ்தானில் வித்தியாசம்
ஜோத்பூர்: நாடு முழுவதும் தசரா விழாவை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில்,நூறு குடும்பங்கள் ராவணன் கொல்லப்பட்டதற்கு துக்கம் அனுசரித்து வருகின்றனர். தங்களை, இவர்கள் ராணவன் வாரீசு என்று கூறி அனுசரித்து வருகின்றனர். தசரா பண்டிகையின் போது, ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகள் தீவைத்து கொளுத்தப்பட்டு விழா பாரம்பரியமாக நடக்கிறது. வடமாநிலங்களில், "ராமலீலை' என்று கொண்டாடுகின்றனர். ராவணன் கொல்லப்பட்ட தினத்தை ஜோத்பூர் மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள தேவ், கேதா, ஸ்ரீமால் வம்சாவளி குடும்பங்களை சேர்ந்தவர்கள் துக்க தினமாக அனுசரிக்கின்றனர்.
தசரா பண்டிகை முடிந்த 10வது நாளில், அவர்கள் ராவணன் மற்றும் கும்பகர்ணனுக்கு, " சிராத்த கர்மா' என்ற, காரியச் சடங்குகளை நடத்துகின்றனர் இவர்கள். இலங்கையில் இருந்து இப்பகுதியில் குடியேறியவர்களாக தங்களைக் கூறுகின்றனர். அட்ச ஜோதிட ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள கமலேஷ் தேவ், "நாங்கள் ராவணனை பண்டிதராக பார்க்கிறோம். அவர் சிவ பக்தர். சிவனை நோக்கி ராவணன் வழிப்பட்டதாக கருதப்படும் சந்த்போல பகுதியில், அமர்நாத் கோவில் வளாகத்தில், ராவணனுக்கு கோவில் உள்ளது' என்று கூறினார். அது மட்டுமின்றி, ஜோத்பூர் அருகில் உள்ள மண்டூரில், ராவணனின் சகோதரி மண்டோதரி ஆட்சி செய்து வந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு எந்த விதமான உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இந்திய தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்துறை, ராவணனுக்கு திருமணம் நடந்ததாக கருதப்படும், "ராவணா கி சவ்ரி' என்ற பழங்கால நினைவுச் சின்னத்தை கண்டுபிடித்துள்ளது. தவிரவும், ம.பி. ,யில் தமோ மாவட்டத்தில், சில சிந்திக்குடும்பத்தினர் தங்களது "இஷ்ட தெய்வமாக' ராவணனைக் கருதி, வழிபடுகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment