ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்ற தீவிர முயற்சி
கிணற்றுக்குள் சிறுவன் சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. சிறுவனை மீட்பதற்காக ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு கிணறு தோண்டும் பணி நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது.
ஆழ்குழாய் கிணறு அருகிலேயே குளம் இருப்பதால் கிணற்றுக்குள் நீர் சுரக்க தொடங்கியுள்ளது. மேலும் கிணற்றில் எதிர்பாராமல் மணல் சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால் சோனுவை காப்பாற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ராணுவமும் போலீசாரும் மிகவும் எச்சரிக்கையா செயல்படுகின்றனர். சோனுவை உயிருடன் மீட்க கிராம மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
சோனுவை உயிருடன் மீட்க விரைவாக செயல்படும்படி ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஆழ்குழாய் கிணற்றை மூடாமல் விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர் ந்து, ஆழ்குழாய் கிணற்றை தோண்டிய Ôஜல் நிகாம்Õ என்ற அரசு நிறுவனத்தின் 2 இன்ஜினியர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட எஸ்.பி. ரகுவீர் லால், மாவட்ட நீதிபதி அனில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சோனுவை மீட்கும் பணி நடக்கிறது.
மீட்புப் பணி பற்றி ரகுவீர் லால் கூறுகையில், ÔÔசோனுவை உயிருடன் மீட்க போராடி வருகிறோம். ஆழ்குழாய் கிணற்றின் அருகே 55 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டப்படுகிறது. அதன் வழியே மீட்பு வீரர்களை அனுப்பி சோனுவை மீட்டு வர திட்டமிட்டுள்ளோம். சோனுவிடம் இப்போது எந்தவித அசைவும் இல்லை. இருப்பினும், மீட்பு முயற்சி தொடர்கிறதுÕÕ என்றார்.
சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டால் அவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க, டாக்டர் குழு தயார் நிலையில் உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment