தங்கப் படுக்கை
ஷாங்காய்: தங்கத்தின் விலை, வானளாவ உயர்ந்து நிற்கும் வேளையில் தங்கப் படுக்கையை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது இத்தாலிய நிறுவனம் ஒன்று.
சீனாவின் ஷாங்காய் நகரில், கோடீஸ்வரர்களுக்கான ஆடம்பர பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சொகுசு கார்கள் முதல் விலை உயர்ந்த பல்வேறு ஆடம்பர பொருட்கள் இடம்பெறுகின்றன. இந்த தங்கப் படுக்கையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. 22 காரட் தங்க இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ.11 லட்சத்து 52 ஆயிரம். தலையணையின் விலை ரூ.48 ஆயிரம். இத்தாலியைச் சேர்ந்த மேக்னிபிளெக்ஸ் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment