சர்வதேசப் பொலிஸாரினால் தேடப்படும் கொலைக்குற்றவாளி
ஒன்ராரியோ பிறம்ரன் பகுதியில் வசித்த சீக்கிய இனத்தவரான அம்ரீதா சிங் என்ற 20 வயதுப் பெண்ணை 2004ம் ஆண்டு பங்குனி மாதம் 20ம் திகதி அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இலங்கைத் தமிழரான 31 வயதான நவநீதன் குணநாதன் என்பவருக்கு 34 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்ரீதா சிங்கை சுட்டுக்கொன்றவரான விஜய் எனப்படும் விஜயராஜா மாணிக்கவாசகர் எனப்படும் 27 வயது நபர் கனேடியப் பொலிசாரினால் தேடப்பட்டு வருகிறார். இவர் இலங்கை சென்று பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் சர்வதேசப் பொலிஸாரின் உதவியை நாடியிருக்கின்றனர். இந்தக் கொலையில் முக்கிய பங்கு வகித்த மேலும் இருவருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி புரூஸ் டூர்னோ தெரிவித்தார்.
கொலையில் சம்பந்தப்பட்ட வாகனச் சாரதிக்கு 7 வருடங்களும் நேரடியாகச் சம்பந்தப்படா விட்டாலும் துப்பாக்கி வழங்கிய குற்றத்திற்கு மற்றொருவருக்கு 4 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குணநாதன் என்பவர் கடையொன்றில் வேலை செய்து வந்தவரென்றும் கடந்த நான்கு வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என்று நீதிபதி மேலும் தெரிவித்தார். இவர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த பட்ச சிறைத் தண்டனையையிட்டு கொல்லப்பட்ட அம்ரீதா சிங்கின் தந்தை ஜய்ராம் சிங் விசனம் தெரிவித்தார். அந்தப் பயங்கரமான இரவையிட்டு அந்தக் குடும்பத்தினர் மனமுடைந்து போயுள்ளனர். எங்கள் வாழ்க்கை அழிந்து விட்டது. எங்களுக்கு பிறந்த நாள்விழாக்கள் இல்லை. கிறிஸ்மஸ் பண்டிகை இல்லை. எங்களுக்கு எதுவும் ஈடாகாது. தங்கள் மகளை சுட்டுக் கொன்றவனை பொலிஸாரால் கைது செய்ய முடியாது அவன் எதற்காக இங்கு வரப் போகிறான் என்று கண்ணீர் மல்கக் கூறினார் மகளைப் பறிகொடுத்த ஜய்ராம் சிங்.
பின்வரும் லிங்கில் உள்ள போஸ்டரைப்பார்க்கவும்
http://www.rcmp-grc.gc.ca/wanted/manickavasagar_bulletin.pdf
0 விமர்சனங்கள்:
Post a Comment